இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: தமிழ்நாடு பதிப்பு!
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றாலே வித விதமான உணவுகள், கடற்கரைகள் நமக்கு நினைவிற்கு வரும். தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சில தெரு உணவுகளை காணலாம். தோசை: தென்னிந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியலில் தோசை, உளுந்த வடை, பருப்பு வடை போன்றவைகள் முதலில் இருக்கும். பல வகை சட்னிகள் மற்றும் சாம்பாருடன் இவை பரிமாறப்படுகிறது. இந்த உணவுகள் சென்னையின் தெருக்களில் அதிகளவில் காணப்படும். சிக்கன் 65: "சிக்கன் 65" என்று அழைக்கப்படும் இந்த சுவையான வறுத்த இரைச்சியால் செய்யப்படும் உணவு தமிழ்நாட்டிலிருந்து வந்தது. இது ஒரு காரமான மற்றும் சுவையான சிற்றுண்டி ஆகும். முதலில் கோழி இறைச்சியை பல வகை மசலாக்களில் ஊற வைத்த பின் எண்ணையில் வறுத்தெடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கிடைக்கும் தெரு உணவுகள்
பீச் சுண்டல்: பச்சைப்பயறு, கிட்னி பீன்ஸ், கொண்டைக்கடலை உள்ளிட்ட பல்வேறு பருப்பு வகைகளை கொண்டு இந்த சுண்டல் செய்யப்படுகிறது. இந்த சிற்றுண்டிக்கு வெங்காயம், பச்சை, மிளகாய், தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. காளான்: சாதாரணமாக பானிபூரி கடைகளில் கிடைக்கும் இந்த காளான் என்ற தெரு உணவிற்கு தமிழ்நாட்டில் மவுசு ஜாஸ்தி. காளான், முட்டைகோஸ், மைதா மற்றும் மசாலாக்களால் செய்யப்படும் இந்த தெரு உணவின் விரும்பிகள் தமிழ்நாட்டில் அதிகம். சைவ பிரியர்கள் அதிகம் விரும்பும் ஒரு உணவு இதுவாகும். தமிழ்நாட்டில் பல்வேறு தெரு உணவுகள் இருப்பினும் மேற்படி குறிப்பிட்டுள்ள அனைத்தும் முக்கியமானவை.