இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: கொல்கத்தா பதிப்பு!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு தெரு உணவு சிறப்புமிக்கதாக இருக்கும். ஏற்கனவே டெல்லி, மும்பை போன்ற இடங்களில் கிடைக்கும் முக்கியமான தெரு உணவுகளின் பட்டியல்களை பார்த்தோம். இப்போது கொல்கத்தாவில் கிடைக்கும் தெரு உணவுகள் என்னென்ன என்பதை காணலாம். ஜல்முரி: ஜல்முரி எவற்றால் செய்யப்படுகிறது? ஜல்முரி என்பது கொல்கத்தாவில் கிடைக்கும் ஒரு தெரு உணவாகும். இதில் மிக்சர், கடலை மற்றும் பொரி சேர்க்கப்படுகிறது. இதை செய்யும் போது, பஃப்ட் அரிசியுடன், அதாவது பொரியுடன் பச்சை மிளகாய், வெங்காயம், வெள்ளரி மற்றும் தக்காளி சேர்த்து கலக்கப்படுகிறது. ஜல்முரி ஒரு சாட் மசாலா வகையாகும்.
கொல்கத்தாவில் கிடைக்கும் தெரு உணவுகள்
காத்தி ரோல்: வதக்கிய வெங்காயம், முட்டை கோஸ், இறைச்சி மற்றும் மசாலாக்களால் செய்யப்படும் இந்த கலவை சூடான சப்பாத்திக்குள் வைக்கப்பட்டு ரோல் செய்து தரப்படுகிறது. இது இரவு நேரத்தில் வெளியே சென்று சாப்பிடுவதற்கு ஏற்ற உணவாகும். புச்கா: இது காரமான, புளிப்பான, தாகத்தைத் தணிக்கும் தெரு உணவு ஆகும். இது கொல்கத்தா மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. புச்கா என்பது பானிபூரியின் (கோல் கப்பா) மற்றொரு வகையாகும். மொறுமொறுப்பான பூரியில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் புளிப்பு, காரம் கலந்த மசாலா நீர் ஊற்றப்படுகிறது. இந்த தெரு உணவு புச்கா என கொல்கத்தாவில் அழைக்கப்படுகிறது.