LOADING...
கிருஷ்ண ஜெயந்தி Vs கோகுலாஷ்டமி: இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி என இரு பெயர்களில் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்

கிருஷ்ண ஜெயந்தி Vs கோகுலாஷ்டமி: இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 12, 2025
12:47 pm

செய்தி முன்னோட்டம்

ஹிந்துக்கள் பலரும், பகவான் கிருஷ்ணரின் பிறந்த தினத்தை தமிழகத்திலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி என இரு பெயர்களில் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். இரண்டும் ஒன்றேதானா? அல்லது கால அளவில் வேறுபட்ட தினங்களா? என்ற கேள்வி பலருக்குள் உள்ளது. இப்போது இதற்கான தெளிவான பதில் இதோ:

பின்னணி

கிருஷ்ணர் அவதாரம் பற்றி புராணங்கள் கூறுவது என்ன?

பகவான் விஷ்ணுவின் 10 அவதாரங்களில் முக்கியமானது கிருஷ்ணர் அவதாரம். கர்மங்களின் முடிவாகவும், தர்மத்தின் நிலைபேறாகவும், அத்துடன் கம்சனை வதம் செய்யவும் கிருஷ்ணர் பூமிக்கு அவதரித்தார். அவருடைய பிறந்த நாள் கிருஷ்ண ஜெயந்தி என அழைக்கப்படுகிறது. தேவகியின் கற்பத்தில், ஆவணி மாதம் (ஆகஸ்ட் - செப்டம்பர்), தேய்பிறை அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரம் இணையும் நாளில்தான் கிருஷ்ணர் பிறந்தார். இந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி. அதன்படி, இந்த 2025 ஆண்டு, ஆகஸ்ட் 16, சனிக்கிழமை கிருஷ்ணனின் பிறந்த நாள், ரோகிணி நட்சத்திரம் - ஆகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை. இதனால், இரு நாட்களும் கிருஷ்ண ஜெயந்தி எனக் கொண்டாடப்பட உள்ளது.

கோகுலாஷ்டமி

கோகுலாஷ்டமி என்றால் என்ன?

கிருஷ்ணர் பிறந்த இரவின் பின் நாளில், வசுதேவர் தனது மகனான கிருஷ்ணரை சிறையிலிருந்து ரகசியமாக கோகுலம் எனப்படும் இடத்திற்கு கொண்டு செல்கிறார். அங்கே யசோதையின் குழந்தையை மாற்றிக் கொண்டு வருகிறார். கிருஷ்ணர் கோகுலத்தில் சேர்ந்த நாள் தான் கோகுலாஷ்டமி என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களை கிருஷ்ணர் மற்றும் ராதை வேடங்களில் அலங்கரிக்கின்றனர். வெண்ணெய், லட்டு, உளுந்து சுண்டல் போன்ற கிருஷ்ணருக்குப் பிடித்த பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. கோவில்களில் விசேஷ பூஜைகள், உற்சவங்கள், பவனிகள் நடத்தப்படும்.