LOADING...
ஆரோக்கியத்தையும் ஆயுளையும் கூட்டும் பாரம்பரிய இந்திய உணவு பழக்கங்கள்
இந்தியர்களின் பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்கள் இன்றும் உலகளவில் வியப்புடன் பார்க்கப்படுகின்றன

ஆரோக்கியத்தையும் ஆயுளையும் கூட்டும் பாரம்பரிய இந்திய உணவு பழக்கங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2026
06:11 pm

செய்தி முன்னோட்டம்

நவீன உணவு கலாச்சாரம் பெருகிவிட்ட போதிலும், இந்தியர்களின் பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்கள் இன்றும் உலகளவில் வியப்புடன் பார்க்கப்படுகின்றன. சுவைக்காக மட்டுமன்றி, செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த பழக்கவழக்கங்களை ஆயுர்வேதமும், நவீன மருத்துவமும் அங்கீகரிக்கின்றன. அவை என்ன என்பது குறித்து ஒரு பார்வை:

பழக்கம் #1

தினசரி உணவு வழக்கங்கள் #1

காலையில் வெதுவெதுப்பான நீர்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, வளர்சிதை மாற்றத்தை (Metabolism) சீராக்குகிறது. இது சரும ஆரோக்கியத்திற்கும், ஆற்றலுக்கும் உதவுகிறது. பருவகால பழங்கள்: கோடையில் மாம்பழம், குளிர்காலத்தில் கொய்யா என அந்தந்த காலநிலைக்கு ஏற்ப விளையும் பழங்களை உண்பது உடலின் இயற்கையான தேவைகளை பூர்த்தி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மருத்துவ குணமிக்க அஞ்சறை பெட்டி: மஞ்சள், சீரகம், கொத்தமல்லி போன்ற மசாலாப் பொருட்கள் வெறும் சுவைக்காக மட்டுமல்ல; இவை வீக்கத்தை குறைக்கும் மற்றும் செரிமானத்தை தூண்டும். மிதமான உணவு: வயிறு முழுமையாக நிறைவதற்கு முன்பே உண்பதை நிறுத்திக் கொள்வது, உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது.

பழக்கம் #2

தினசரி உணவு வழக்கங்கள் #2

உடனுக்குடன் சமைத்த உணவு: பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, வீட்டிலேயே அவ்வப்போது சமைத்த புதிய உணவுகளை உண்பது ஊட்டச்சத்துக்கள் சிதையாமல் உடலுக்கு சேர உதவுகிறது. மூலிகை தேநீர்: துளசி, இஞ்சி அல்லது சோம்பு கலந்த மூலிகை தேநீர் அருந்துவது மன அழுத்தத்தை குறைப்பதோடு, சளி மற்றும் செரிமான கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. அளவான நெய்: பருப்பில் சிறிதளவு நெய் சேர்ப்பது உணவின் சுவையை அதிகரிப்பதோடு, குடல் ஆரோக்கியத்தையும், வலிமையையும் மேம்படுத்துகிறது. கைகளால் உண்ணுதல்: கைகளால் உண்பது, விரல் நுனியில் உள்ள நரம்புகளை தூண்டி செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் நாம் உண்ணும் உணவின் அளவை உணர உதவுகிறது.

Advertisement