உடல் எடை குறைய, அன்னாசிபழத்தை சாப்பிடுங்கள்
செய்தி முன்னோட்டம்
அன்னாசி பழம்! இதற்கு தமிழில் வேறு சில பெயர்களும் உண்டு: `செந்தாழை', `பூந்தாழப் பழம்' என பல்வேறு வழக்காடு மொழிகளில் அறியப்படுகிறது.
பிரேசில் நாட்டை பூர்விகமாக கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் ஏ,பி,சி, பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், மினரல்ஸ், புரதம், இரும்பு சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த பழத்தில் நார்சத்து அதிகமாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி, பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது இந்த பழம்.
அன்னாசி பழத்தின் நன்மைகளை உங்களுக்காக இங்கே பட்டியிலிடுகிறோம்.
card 2
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் அன்னாசி
குடல் ஆரோக்கியம்: அன்னாசி பழத்தில் 85% நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. புரோமெலைன் என்ற என்சைம் நிறைந்துள்ளதால், உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி: இதில் அடங்கியுள்ள வைட்டமின்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது: அன்னாசி பழத்தில், நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது: அன்னாசி பழத்தில் நிரம்பியுள்ள பினோலிக்ஸ், ஃபிளாவனாய்டு மற்றும் வைட்டமின்- சி தாதுக்கள், புற்று நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணி: இந்த பழத்தில், புரோமெலைனில் இருப்பதால், உங்கள் வலியை குறைக்கிறது. கூடவே இதில் கால்ஷியம் நிறைந்திருப்பதால், எலும்புகளும் வலு பெறும்.