இன்று உலக 'Oral Health Day': வாய்வழி ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்
செய்தி முன்னோட்டம்
உங்கள் உடலில் ஏற்படும் கோளாறுகளை, வாய் மூலமாக, உங்களுக்கு தெரியப்படுத்திகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதேபோல, உங்கள் வாயில் ஏற்படும் கோளாறுகளால், உங்கள் உடல் உறுப்புக்கள் பாதிப்படைகிறது என்று தெரியுமா?
இவற்றையெல்லாம் பற்றி பேசுவது தான் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதுதான் இந்த நாளின் நோக்கம்.
முதன்முதலில், 'உலக வாய்வழி (Oral) சுகாதார' தினத்தை கொண்டாடுவதற்கான யோசனை, 2007-ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை முன்வைத்தது, பல்மருத்துவர்கள் கூட்டமைப்பான FDI என்ற அமைப்பு.
அந்த ஆண்டு முதல், செப்டம்பர் 12 வாய்வழி ஆரோக்கியத்திற்க்கான நாளாக அனுசரிக்கப்பட்டது. அதற்கு காரணம், செப்டம்பர் 12 , FDI நிறுவனரான டாக்டர் சார்லஸ் கோடனின் பிறந்த தேதி அது.
வாய்வழி சுகாதாரம்
2013 முதல் மாற்றப்பட்ட 'Oral Health Day'
அதன் பின்னர், 2013-ஆம் ஆண்டு முதல், உலக வாய்வழி சுகாதார தினம் மார்ச் 20 க்கு மாற்றப்பட்டது.
வாய்வழி நோய்கள், பெருமளவில் தடுக்கக்கூடியவையாக இருந்தாலும், இன்றும் பல பின்தங்கிய நாடுகளில், அது ஒரு பெரிய சுகாதார பாதிப்பை ஏற்படுத்துகிறது. அங்கிருக்கும் மக்கள் பலரும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை சந்திக்கின்றனர். உலகளவில் 3.5 பில்லியன் மக்களை வாய்வழி நோய்கள் தாக்குவதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
பல் சிதைவு மிகவும் பொதுவான சுகாதார நிலையாக தோன்றலாம். ஆனால், பெரும்பாலான நேரங்களில், உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தல் முதல் பல நோய்களின் முதல் அறிகுறி, வாய்வழி மூலமாகவே நமக்கு தெரியவருகின்றது.
அதேபோல கவனிக்கப்படாத பல் சொத்தை, புற்றுநோய்கள், எய்ட்ஸ் போன்ற நோய்களை வரவழைக்கும் ஆபத்தும் உள்ளது.