நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதத்தின் போது சாப்பிடக்கூடாத உணவுகள்
அடுத்த ஒன்பது நாட்களுக்கு நவராத்திரி விழா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், நவராத்திரி விரதத்தின் போது சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து இப்போது பார்க்காலம். வழக்கமான உப்பு போட்டு சாப்பிடாதீங்க வழக்கமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் ஐயோடின் சேர்ந்த டேபிள் உப்பை பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையான கல் உப்பை விரதங்களின் போது பயன்படுத்துவது தான் நல்லது. பருப்பு, தானியங்கள், உருளை கிழங்கு வேண்டாம் பருப்பு, தானியங்கள் மற்றும் உருளை கிழங்கு போன்ற உணவுகள், வாயுவை உண்டாக்கக்கூடிய உணவுகளாகும். எனவே, விரதத்தின் போது, இவற்றை தவிர்த்தால் அதிகப்படியான அசௌகரியங்களை தவிர்க்கலாம்.
வெங்காயம், பூண்டுக்கு 'நோ' சொல்லுங்க
வெங்காயம் மற்றும் பூண்டு, சோம்பலை தூண்டும் பொருட்களாக கருதப்படும் உணவுகளாகும். இதற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றாலும், இவை இரண்டையும் தவிர்த்தால், ஆன்மீக மனநிலை கலையாமல் இருக்கும் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். இறைச்சி மற்றும் முட்டைகளை தொட வேண்டாம் நவராத்திரி, சைவ சமயத்தை சேர்நத பூஜை என்பதால், மட்டன், சிக்கன், மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது அவசியமாகும். மேலும், வருடத்தில் 9 நாட்கள் இவைகளை உண்ணாமல் விரதம் இருப்பதால், உடலும் புத்துயிர் பெறும். புளித்த உணவுகளை சாப்பிட வேண்டாம் ஈஸ்ட் சேர்த்த பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட இன்ஸ்டன்ட் உணவுகள், புளிக்கவைக்கபட்ட ஊறுகாய் போன்ற உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. விரதம் இருக்கும் நேரத்தில் இவைகளை உண்டால், உடலின் சமநிலை பாதிக்கப்படக்கூடும்.