அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? எதை தவிர்க்க வேண்டும்?
ஆரோக்கியமான உணவு முறை: சமையலறையில் அலுமினியம் ஃபாயிலை (Aluminium Foil) பலவிதமாகப் பயன்படுத்துகிறோம். அதாவது சமையலறையில் மட்டுமல்ல, உணவுகளை மூடி வைப்பதற்கு, உணவுகளை பேக் செய்து எடுத்து செல்வதற்கு என பல விஷயங்களில் அலுமினியம் ஃபாயில் ஷீட் பயன்படுத்தப்படுகிறது. எனினும், சில பயன்பாடுகளில் அதனை தவிர்ப்பது நல்லது என உணவு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர் . ஏனெனில் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் சில விஷயங்களும் இதில் உள்ளன. அதற்காக அலுமினியம் ஃபாயிலை முற்றிலுமாகப் பயன்படுத்த கூடாது என்பது அர்த்தமல்ல. ஒரு சில நேரத்தில் அதை பயன்படுத்த கூடாது. அது எப்போது என தெரிந்துகொள்ள மேற்கொண்டு படிக்கவும்.
தவிர்க்க வேண்டியவை
சமைத்த உணவை மூடி வைக்க அலுமினியம் ஃபாயில் ரேப்-ஐ பயன்படுத்தலாம். இது உங்கள் உணவின் Moisture-ஐ தக்க வைத்து, ஃப்ரெஷ்ஷாக & நீண்ட நேரம் உணவை சூடாக வைத்திருக்க உதவும். நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்கும் மற்றும் ட்ரை ஃபுட்ஸ்களை, அலுமினியம் ஃபாயிலில் சேமித்து வைக்கலாம். இது ஷெல்ஃப்-லைஃபை நீட்டிக்க உதவுவதோடு, உணவின் Moisture-ஐ லாக் செய்து, நீண்ட நாள் ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க உதவுகிறது. மாவால் செய்த உணவுகளான கேக் போன்றவற்றை பேக்கிங் செய்வதற்கோ அல்லது ரோஸ்ட் செய்த காய்கறிகளை சேமிக்கவோ பயன்படுத்தக்கூடாது. காரணம், அலுமினியம் வெப்பத்தை கடத்தும் திறன் கொண்டது. அது உணவு பொருட்களுடன் ஒட்டிக்கொண்டு, உணவுடன் கலந்து விடும் வாய்ப்புள்ளது. மாறாக, Parchment paper-ஐ பயன்படுத்தலாம்.