NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / வரும் சுதந்திர தினம் 2023, 76வது அல்லது 77வது ஆண்டு விழாவா? தெரிந்துகொள்வோம், வாருங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வரும் சுதந்திர தினம் 2023, 76வது அல்லது 77வது ஆண்டு விழாவா? தெரிந்துகொள்வோம், வாருங்கள்

    வரும் சுதந்திர தினம் 2023, 76வது அல்லது 77வது ஆண்டு விழாவா? தெரிந்துகொள்வோம், வாருங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 14, 2023
    03:14 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏறக்குறைய 200 ஆண்டுகால பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது.

    இந்தியா தனது சுதந்திர தினத்தை, நாளை, ஆகஸ்ட் 15 அன்று கொண்டாட தயாராகி வருகிறது.

    ஆனால் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு முன், பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உள்ளது.

    இது எத்தனையாவது சுதந்திர தினம்? 76வது அல்லது 77வது? தெரிந்து கொள்வோம்.

    இந்தியா தனது முதல் சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15, 1948 அன்று கொண்டாடியது. இந்த கணக்குப்படி பார்த்தல், இந்த ஆண்டு சுதந்திரத்தின் 76-வது ஆண்டு விழாவாக இருக்கும்.

    card 2

    2023 ஆம் ஆண்டின் தீம்

    இருப்பினும், ஆகஸ்ட் 15, 1947 அன்று, இந்தியாவின் சுதந்திரத்தின் தொடக்கமாக எண்ணத் தொடங்கினால், நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் நிறைவடைந்ததாகக் கருதினால், அது 77 வது ஆண்டு விழாவாக மாறும்.

    இரண்டு வாதங்களும் சரியானவை என்பதே இதன் முக்கிய அம்சம்.

    2023 ஆம் ஆண்டில், சுதந்திர தினத்தின் முழக்கமாக "தேசம் முதலில், எப்போதும் முதலில்" இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலே, இந்தாண்டின் சுதந்திரதின கொண்டாட்டங்கள் அமைந்திருக்கும்.

    இந்த சிறப்பு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மத்திய அரசு, இந்திய பிரஜைகளை, தங்கள் வீடுகள் மற்றும் பணியிடங்களில், மூவர்ணக் கொடியை பெருமையுடன் காண்பிக்க ஊக்குவிக்கிறது.

    இதற்காக, தபால் நிலையங்கள் மூலம் தேசியக் கொடியை விற்பனை செய்யும் முறையையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுதந்திர தினம்
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சுதந்திர தினம்

    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் தமிழ்நாடு
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி? சிவகங்கை

    இந்தியா

    மும்பையில் இரண்டு நாட்களுக்கு வாகனங்களில் ஹாரன் அடிக்க தடை  மும்பை
    சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் 18 பதக்கங்களைக் குவித்த இந்திய வீரர்கள் விளையாட்டு வீரர்கள்
    இந்தியாவை அதிகம் குறிவைத்து தொடுக்கப்பட்ட 'ஹேக்டிவிஸ்ட்' சைபர் தாக்குதல்கள் சைபர் கிரைம்
    இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 25 பேருக்கு பாதிப்பு கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025