LOADING...
கொடுத்தால் உயர்வோம்! 2026 மகளிர் தினத்தின் 'Give to Gain' தீம் எதைக் குறிக்கிறது? பெண்களின் முன்னேற்றத்திற்கான புதிய தாரக மந்திரம்
சர்வதேச மகளிர் தினம் 2026க்கான 'Give to Gain' கருப்பொருளின் முக்கியத்துவம்

கொடுத்தால் உயர்வோம்! 2026 மகளிர் தினத்தின் 'Give to Gain' தீம் எதைக் குறிக்கிறது? பெண்களின் முன்னேற்றத்திற்கான புதிய தாரக மந்திரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 05, 2026
01:53 pm

செய்தி முன்னோட்டம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான மகளிர் தினத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருளாக 'Give to Gain' (முன்னேற்றத்திற்காக ஆதரவை வழங்குங்கள்) என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தலுக்குத் தாராள மனப்பான்மையுடனும், ஒத்துழைப்புடனும் ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

பொருள்

'Give to Gain' என்பதன் பொருள் என்ன?

இந்த வாசகம் 'பரஸ்பர உதவி' என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, ஒரு பெண் அல்லது சிறுமியின் கல்வி, தலைமைத்துவம் அல்லது வேலைவாய்ப்பிற்கு நாம் அளிக்கும் ஆதரவு (Give), ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கு (Gain) வழிவகுக்கும். பெண்கள் வெற்றி பெறும்போது, ஒட்டுமொத்த சமூகமும் செழிப்படைகிறது. இது ஒரு கூட்டு வெற்றிக்கான முயற்சி என்று இந்தக் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

இலக்கு

ஐக்கிய நாடுகள் சபையின் 2026 இலக்கு

ஐக்கிய நாடுகள் சபை 2026 ஆம் ஆண்டிற்கான தனது மையக்கருத்தாக "உரிமைகள். நீதி. நடவடிக்கை. அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக" (Rights. Justice. Action. For ALL Women and Girls) என்பதை முன்வைத்துள்ளது. இதன் மூலம், பெண்களுக்குத் தடையாக இருக்கும் சமூக மற்றும் சட்ட ரீதியான தடைகளை அகற்றுவதில் கவனம் செலுத்தப்படுகிறது. அரசாங்கங்களும் நிறுவனங்களும் பெண்களின் முன்னேற்றத்தில் உண்மையான முதலீடுகளைச் செய்ய வேண்டும் என இது வலியுறுத்துகிறது.

Advertisement

பங்களிப்பு

நாம் எவ்வாறு பங்களிக்கலாம்?

'Give to Gain' என்பது வெறும் நிதி உதவி மட்டுமல்ல. பின்வரும் வழிகளில் நாம் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க முடியும்: அறிவுப் பகிர்வு: பெண்களுக்குத் தேவையான கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குதல். வழிகாட்டுதல்: பணிபுரியும் இடங்களில் பெண்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் ஊக்கத்தையும் அளித்தல். வாய்ப்புகள்: தலைமைத்துவப் பொறுப்புகளில் பெண்களுக்கு முன்னுரிமை மற்றும் சமவாய்ப்பு வழங்குதல். ஆதரவு: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தல்.

Advertisement

வரலாறு

மகளிர் தினத்தின் வரலாற்று முக்கியத்துவம்

மகளிர் தினம் 1900 களின் தொடக்கத்தில் பெண்களின் வாக்குரிமை மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்தக் கோரித் தொடங்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. 2026 ஆம் ஆண்டில், ஞாயிற்றுக்கிழமை வரும் இந்த மகளிர் தினம், பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளை ஒழிக்கவும், சம ஊதியம் வழங்கவும் உலக நாடுகளுக்கு நினைவூட்டுகிறது.

Advertisement