சர்வதேச மகளிர் தினம் 2025: வரலாறும் முக்கியத்துவமும்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஆதரிக்கவும் கொண்டாடப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில், மகளிர் தினம் "செயலை துரிதப்படுத்து" என்ற தீமின் (Theme) கீழ் அனுசரிக்கப்படும்.
இது பாலின சமத்துவத்தை நோக்கி அவசர நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
முக்கியத்துவம்
மகளிர் தினத்தின் வரலாற்று முக்கியத்துவம்
சர்வதேச மகளிர் தினத்திற்கான தோற்றம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த தொழிலாளர் இயக்கத்தில் தொடங்குகிறது.
அப்போது தொழில்மயமாக்கலின் போது உருவான மோசமான வேலை நிலைமைகளுக்கு எதிரான போராட்டங்களால் தூண்டப்பட்டது.
1908 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் 15,000 பெண்கள் தங்களுக்கான உரிமைகளைக் கோரி நடத்திய அணிவகுப்பு மற்றும் கிளாரா ஜெட்கின் 1910ஆம் ஆண்டு பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச தினத்தை முன்மொழிந்தார்.
இதைஎடுத்து முதல் சர்வதேச மகளிர் தினம் 1911இல் பல நாடுகளில் அனுசரிக்கப்பட்டது.
1917 ஆம் ஆண்டில், ரஷ்ய பெண்களின் வேலைநிறுத்தம் மார்ச் 8 அதிகாரப்பூர்வ தேதியாக அங்கீகரிக்கப்பட வழிவகுத்தது.
ஐநா சபை 1975 இல் சர்வதேச மகளிர் தினத்தை முறையாக அங்கீகரித்து, அதன் முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தியது.
மாற்றம்
மாற்றத்திற்கான ஒரு தளம்
சர்வதேச மகளிர் தினம் என்பது வழக்கமான ஒரு கொண்டாட்டத்திற்கு அப்பாற்பட்டு பாலின ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கான ஒரு தினமாக பார்க்கப்படுகிறது.
இது பெண் அதிகாரத்திற்கான உலகளாவிய ஒற்றுமையை வளர்க்கும் அதே வேளையில், பெண்களுக்கு இருக்கும் பொருளாதார சமத்துவமின்மை, அரசியல் பிரதிநிதித்துவமின்மை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை எடுத்துக்காட்டுகிறது.
பெண்களின் உரிமைகளை வடிவமைக்கும் சட்டங்கள் மற்றும் சமூக மாற்றங்களை இந்த நாள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
முன்னேற்றம் இருந்தபோதிலும், சவால்கள் நீடிக்கின்றன.
சர்வதேச மகளிர் தினம் 2025 ஐ சாதனைகளை மதிப்பிடுவதற்கும், தடைகளை எதிர்கொள்வதற்கும், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் ஒரு முக்கிய தருணமாக மாற்றுகிறது.