
சர்வதேச புலிகள் தினம்: புலிகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
புலிகள் மற்றும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்காகவும், அவற்றின் உலகளாவிய எண்ணிக்கையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில், புலிகளைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம்.
பெரும்பாலான வீட்டு மற்றும் காட்டுப் பூனைகளைப் போலல்லாமல், புலிகள் தண்ணீரில் நனைவதை விரும்புகின்றன.
அவைகளை விட்டால் மணிக்கணக்கில் தண்ணீரில் நீந்தி கொண்டிருக்கும்.
அதனால், புலிகளுக்கு தண்ணீரில் வேட்டையாடவும் தெரியும்.
ஒரு புலி ஒரே நாளில் 30 கிலோமீட்டர் தூரம் வரை நீந்தியதாக ரந்தம்பூர் தேசிய பூங்காவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
புலி குட்டிகள் இயற்கையாகவே பார்வையற்றவைகளாக பிறக்கின்றன.
வ்ஜ்ல்க்
புலிகள் மனிதர்களை தங்கள் இரையாக கருதுவதில்லை
இதனால்தான், சில புலிகள் சிறு குட்டியாக இருக்கும் போதே இறந்து விடுகின்றன.
பார்வையற்ற புலிகள் தங்களது தாய் புலியின் வாசத்தை வைத்தே வெளியே நடமாடும்.
இதனால், பெரும்பாலான புலிகள் உணவில்லாமலோ வானிலை மாற்றங்கள் காரணமாகவோ இறந்துவிடுகின்றன.
சில குட்டி புலிகளை அதனுடைய தந்தையே அடித்து சாப்பிட்டுவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீட்டுப் பூனைகளைப் போலவே, புலியின் உமிழ்நீரும் கிருமி நாசினியாகும்.
ஏனெனில் அவைகளின் உமிழ்நீரில் லைசோசைம் என்சைம்கள் உள்ளன. இது காயங்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
பொதுவாக, புலிகள் கூச்ச சுபாவமுள்ளவை. அதிலும், மனிதர்களை கண்டால் அவைகளே புதருக்குள் சென்று ஒழிந்துகொள்ளும் சுபாவம் உடையவை.
அவைகளை தொந்தரவு செய்தால் அல்லது காயப்படுத்த முயற்சித்தால் மட்டுமே அவை மனிதர்களை தாக்கும்.