LOADING...
இளநீர் மற்றும் தேங்காய் பால் இருந்தால் போதும்! உலகத்தரம் வாய்ந்த 5 சம்மர் டிரிங்க்ஸ்
கோடைக்கு ஏற்ற 5 சர்வதேச தேங்காய் பானங்கள்

இளநீர் மற்றும் தேங்காய் பால் இருந்தால் போதும்! உலகத்தரம் வாய்ந்த 5 சம்மர் டிரிங்க்ஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 28, 2026
07:25 pm

செய்தி முன்னோட்டம்

தேங்காய் பால் என்பது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதில் வைட்டமின்கள், மினரல்கள் நிறைய உள்ளன. தேங்காய் பால் குடிப்பது எலும்புகளை பலப்படுத்தும். இதில் பொட்டாசியம் இருப்பதால், ரத்த அழுத்தத்தையும் கண்ட்ரோல் செய்யும். சரி, தேங்காயைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யக்கூடிய சில சர்வதேச பானங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

#1

இளநீர்

இளநீர் இயற்கையாகவே நம்முடைய உடம்புக்கு நல்ல புத்துணர்ச்சியை தரும் ஒரு பானம். இதில் பொட்டாசியம், மெக்னீசியம் நிறைய உள்ளன. இளநீர் குடிப்பதால் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும், உடனடியாக எனர்ஜியும் கிடைக்கும். இதை செய்வதற்கு ஃப்ரெஷ்ஷான இளநீரை அப்படியே பயன்படுத்தலாம், இதில் எந்த கெமிக்கலும் கலக்கப்படாது. கோடை காலத்தில் உடம்பை ஜில்லென வைத்துக்கொள்ள இது ரொம்ப நல்ல சாய்ஸ்.

#2

பினாகோலாடா

பினாகோலாடாங்கிறது கரீபியன் பகுதியில ரொம்ப ஃபேமஸான ஒரு பானம். இதை அன்னாசிப்பழம், தேங்காய் பால் வைத்து செய்வார்கள். முதலில் அன்னாசிப்பழத்தை மிக்ஸியில போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர், அதில் தேங்காய் பாலை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை ஐஸ் க்யூப்ஸ் கூட சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்தாள், ஜில்லென, கிரீமியாக மாறிவிடும். இப்போது இதை கிளாஸில் ஊற்றி, மேலே கொஞ்சம் கிரீம் சேர்த்து ஜில்லுனு பரிமாறலாம்.

Advertisement

#3

கோகனட் லஸ்ஸி

கோகனட் லஸ்ஸி ஒரு சூப்பரான இந்திய பானம். இதை தயிர், தேங்காய் பால் கலந்து செய்வார்கள். முதலில் தயிரை நன்றாக கடைந்துகொள்ளுங்கள். அப்புறம் அதில் தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்போது சர்க்கரை அல்லது தேன் சேர்த்து மறுபடியும் ஒரு தடவை கடைந்து அனைத்தையும் ஒன்றாக மிக்ஸ் செய்யவும். இந்த கலவையை ஜில்லுனு பரிமாறி டேஸ்ட் செய்யவும். கோடை காலத்தில் புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய ஒரு பானம் இது.

Advertisement

#4

தாய் கோகனட் க்ரீமர்

தாய் கோகனட் க்ரீமர்ங்கிறது ஒரு அருமையான தாய்லாந்து பானம். இதை தேங்காயோட கிரீமை வச்சு செய்வார்கள். முதலில் தேங்காயுடைய சதைப்பகுதியை தண்ணீருடன் சேர்த்து அரைத்து, அப்புறம் வடிகட்டி கிரீமை எடுத்துக்கொள்ளவும். இப்போது இந்த கிரீமை சர்க்கரை அல்லது தேனுடன் சேர்த்து, மெதுவான தீயில நன்றாக கெட்டியாகும் வரைக்கும் சமைக்க வேண்டும். அப்புறம் இதை ஆறவிட்டு, ஜில்லுனு பரிமாறலாம்.

#5

கோகனட் வாட்டர் ஸ்மூத்தி

கோகனட் வாட்டர் ஸ்மூத்தி என்பது உடம்புக்கு மிகவும் சத்தான ஒரு பானம். இதில் வாழைப்பழம், பப்பாளி, இளநீர் எல்லாம் கலந்திருக்கும். இதை செய்வதற்கு, முதலில் வாழைப்பழம், பப்பாளியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அப்புறம் இதில் இளநீரை ஊற்றி, நன்றாக கிரீமியாக ஆகும் வரைக்கும் அரைக்க வேண்டும். இந்த ஸ்மூத்தியை ஜில்லுனு பரிமாறலாம். இந்த பானங்கள் அனைத்தையும் செய்வது ரொம்ப சுலபம், உடம்புக்கும் நல்லது. அதனால், அடுத்த தடவை நீங்கள் புதிதாக ஏதாவது குடிக்க வேண்டும் என நினைத்தால், இதில் இருந்து எதையாவது செலக்ட் செய்து முயற்சித்துப் பாருங்கள்.

Advertisement