அன்னையர் தினத்தை, அம்மாவுடன் வீட்டில் கொண்டாட முடியவில்லை என்ற வருத்தமா? உங்களுக்கு உதவ சில ஐடியாக்கள்
இந்தியாவில், 'அன்னையர் தினம்' வரும் மே 14 அன்று கொண்டாடப்படுகிறது. தாய்மையின் மகத்துவத்தை போற்ற, நம்மை பெற்ற அன்னைக்கு, பரிசளித்து அவரின் பெருமைகளை நினைவு கூற, ஒரு நாள் இது. இந்த அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவுடன் சேர்ந்து கொண்டாட முடியாத தூரத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் நேரில், ஒன்றாக இருக்க முடியாது என்பதால், அம்மாவை சர்ப்ரைஸ் செய்ய முடியாது என்று அர்த்தமல்ல. நீங்கள் தூரத்தில் இருந்தாலும், அன்னையர் தினத்தன்று தாயை சந்தோஷப்படுத்த உங்களுக்கு சில ஐடியாக்கள் இதோ: ஒரு திரைப்படத்தை ஒன்றாகப் பாருங்கள்: இப்போது பல ஓடிடி தளங்களில், ஒரே நேரத்தில் சேர்ந்து பார்க்கும் வசதி தருகிறது. குறிப்பாக நெட்ஃபிலிக்ஸ் டெலிபார்ட்டி அதற்கு உதவும்.
அழகான பூங்கொத்து மூலம் உங்கள் அன்னையர் தினத்தை பிரகாசமாக்குங்கள்!
பேமிலி கால்: உங்கள் உடன்பிறந்தவர்கள், தாயுடன் பிறந்தவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து கான்பெரன்ஸ் கால் மூலமாக, பழைய நினைவுகளை அசைபோடலாம். உங்கள் தாய், சிறுவயதில் சந்தித்த நண்பர்களை ஒன்றிணைத்து, அவரை சர்ப்ரிஸ் செய்யலாம். அவரின் சிறு வயது புகைப்படங்களை சேகரித்து, அந்த zoom கால்-இல் காட்டி, மகிழ்ச்சியான நினைவுகளை நினைவுகூர செய்யலாம். போக்கே அனுப்பலாம்: அம்மாவை மகிழ்விக்க, அவர் எதிர்பாராத நேரத்தில், அழகிய பூங்கொத்து அனுப்பலாம். அவருக்கு பிடித்த மலர்கள் அடங்கிய பூங்கொத்து, அல்லது பூச்செடிகளை அனுப்பலாம். பிடித்த உணவை ஆர்டர் செய்யுங்கள்: இந்த அன்னையர் தினத்தில், உங்கள் அம்மாவிற்கு, அறுசுவையான உணவைக் கொடுத்து ஆச்சரியப்படுத்துங்கள். அவளுக்குப் பிடித்த உணவகத்திலிருந்து அவளுக்குப் பிடித்த உணவை ஆர்டர் செய்து, டோர் டெலிவரி செய்யுங்கள்.