மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம்
மனித உரிமைகள் தினமான இன்று, அதன் வரலாற்றையும், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக அமையட்டும். 'மனித உரிமைகள் தினம்' ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-10 அன்று கொண்டாடப்படுகிறது. - 1948-ம் ஆண்டு, உலக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை (UDHR) ஏற்றுக்கொண்ட தினத்தையே நாம் 'மனித உரிமைகள் தினமாக' கொண்டாடுகிறோம். இனம், நிறம், மதம், பாலினம், மொழி, அரசியல் அல்லது பிற கருத்து, தேசிய அல்லது சமூக தோற்றம், சொத்து, பிறப்பு, பிற நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் - UDHR உருவாக்கப்பட்ட ஒரு ஆவணமாகும். மனிதனாக அனைவருக்கும் உரிமையுள்ள பிரிக்க முடியாத உரிமைகளை அறிவிக்கிறது. 500 க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணமாகும்.
மனித உரிமைகள் தினத்தின் முக்கியத்துவமும் நம் கடமையும்
மனித உரிமைகள் தினமான இந்நாளின் கருப்பொருள் என்பது அனைவருக்கும் சமத்துவம், நியாயம், சுதந்திரம் மற்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதில் நம்பிக்கை வைப்பதாகும். இனம், நிறம், மதம், பாலினம், மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நபருக்கும் அவரவரின் உரிமைகள் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் பாதிப்பின் விளைவே மனித உரிமைகள் நாள் கொண்டாட ஒரு காரணம் என்று கூட சொல்லலாம். கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி மற்றும் ஆரோக்கியம் அனைத்து மக்களுக்கும் ஒரு அடிப்படை மனித உரிமை என்று வலியுறுத்தி மக்களுக்கு உதவுவதே இதன் குறிக்கோள் ஆகும். இந்நாளில் நாமும் ஓர் மனிதனாய் நமது உரிமைகளுக்காகவும் மற்றவர்களின் உரிமைகளுக்காகவும் நாம் நிற்க வேண்டும்.