
பெண்களே, உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள சில டிப்ஸ்
செய்தி முன்னோட்டம்
பெண்கள் பெரும்பாலும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை, இரண்டிலும் தங்கள் நலனை புறம்தள்ளி விட்டு, மற்றவர்களை முன்னிறுத்துவார்கள்.
சில நேரங்களில், அது அவர்கள் உடலை மட்டுமல்ல, மனதையும் பாதிக்கிறது.
சில ஆய்வுகளின் படி, ஆண்களை விட பெண்களே அதிக மனநலப்பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள்.
நாள்பட்ட மனநல பிரச்சனைகள், பெண்களின் உடலிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
அதனால், பெண்களே, உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்திக்கொள்வது அவசியமாகிறது.
அதற்காக சில டிப்ஸ் இதோ:
உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள்: உங்களை விட முக்கியமானவர்கள் யாருமில்லை. அதனால், உங்களை பற்றி எப்போதும் நேர்மறை எண்ணங்களை கொண்டிருங்கள். நீங்கள் செய்யும் நற்காரியங்களுக்கு, உங்களுக்கு நீங்களே வெகுமதி தந்துகொள்ளுங்கள்.
பெண்கள் ஆரோக்கியம்
ஆரோக்கியமான உணவும், தொடர் உடற்பயிற்சியும் உங்கள் மனஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஆரோக்கியமான உணவு: ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமும், உடல் நிலை மேம்படும். அதனால், நேர்மறை உணர்ச்சிகள் மேம்படும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், சர்க்கரை உணவுகளையும், மது, காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்: உடற்பயிற்சி செய்யும்போது, எண்டோர்பின்கள் ஹார்மோன்கள் உற்பத்தியாகிறது. அது, பதற்றத்தை போக்க உதவும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவுகிறது. அதனால், பதற்றம், மனக்கவலை போன்ற அறிகுறிகளை குறைகிறது.
புதிய ஹாபியை கற்றுக்கொள்ளுங்கள்: உங்கள் மனதை உற்சாகப்படுத்த, ஏதேனும் புதிய ஹாபியை கற்றுக்கொள்ளுங்கள். அது உங்கள் மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது. மனதில் இருக்கும் தேவையற்ற பதட்டங்கள், உங்களுக்கு பிடித்த விஷயங்களை கற்றுக்கொள்ளும் போது நீங்கிவிடும்