LOADING...
பிட்சா கடை ஸ்டைல் சில்லி ஃபிளேக்ஸ் இனி வீட்டிலேயே! வெறும் 5 நிமிஷம் போதும்
'ரெட் சில்லி ஃபிளேக்ஸ்', இனி கடைகளில் வாங்க தேவையில்லை

பிட்சா கடை ஸ்டைல் சில்லி ஃபிளேக்ஸ் இனி வீட்டிலேயே! வெறும் 5 நிமிஷம் போதும்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2026
08:27 am

செய்தி முன்னோட்டம்

பிட்சா அல்லது பாஸ்தா சாப்பிடும்போது அதன் சுவையை அதிகரிக்க நாம் பயன்படுத்தும் 'ரெட் சில்லி ஃபிளேக்ஸ்' (Red Chilli Flakes), இனி கடைகளில் வாங்க தேவையில்லை. 'டொமினோஸ்' 'பிட்சா ஹட்' ஸ்டைலில் பிட்சாவுடன் வழங்கப்படும் அதே தரம் மற்றும் சுவையுடன், உங்கள் வீட்டிலேயே வெறும் 5 நிமிடங்களில் இதனை தயாரிக்க முடியும். அதனை செய்ய எளிதான பொருட்களும், குறைவான நேரமும் தேவை. இதோ செயல்முறை:

செய்முறை

சில்லி ஃபிளேக்ஸ் செய்முறை

முதலில் நன்றாக வெயிலில் காய்ந்த மிளகாய்களை தரம் பிரித்து, அதன் காம்புகளை நீக்கி விடவும். மிளகாய் நல்ல சிவப்பு நிறமாகவும், மொறுமொறுப்பாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வாணலியை மிதமான தீயில் வைத்து, மிளகாய்களை 2 முதல் 3 நிமிடங்கள் வரை வறுக்கவும். (அதிகமாக வறுப்பதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நிறம் மாறிவிடும்) வறுத்த மிளகாய்களை சூடு ஆறியதும், ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, Pulse முறையில் 2 அல்லது 3 முறை லேசாக சுற்றி எடுக்கவும். மிளகாய் தூளாகாமல், சிறுசிறு துண்டுகளாக உடைந்தவுடன் அதனை எடுத்து, காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும். இந்த எளிய முறையில் தயாரிக்கப்படும் சில்லி ஃபிளேக்ஸ், கடைகளில் வாங்குவதை விட ஆரோக்கியமானதும், செலவு குறைவானதும் ஆகும்.

Advertisement