சுவையான ப்ரோக்கோலி சுக்கா வறுவல் செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
ப்ரோக்கோலி என்பது மிக ஆரோக்கியமான ஒரு உணவாகும். நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ப்ரோக்கோலியை அடிக்கடி உண்டு வந்தால், புற்றுநோய் வருவதையும் தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
அதனால், இந்த ஆரோக்கியமான காய்கறியை சுவையான சுக்கா வறுவலாக செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ப்ரோக்கோலி- 1(பெரியது, சிறு பூக்களாக பிய்த்து வைத்து கொள்ளவும்)
பெரிய வெங்காயம்- 1(நறுக்கியது)
தக்காளி- 1(நறுக்கியது)
பூண்டு- 6 பல்
மல்லி தழை(நறுக்கியது)-சிறிதளவு
சமையல் எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
உப்பு மற்றும் தண்ணீர்- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 3 சிட்டிகை
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
கரம் மசாலா- ½ தேக்கரண்டி
சீராக தூள்-¼ தேக்கரண்டி
மிளகு தூள்- ¼ தேக்கரண்டி
திஜுவ்ப்
ப்ரோக்கோலி சுக்கா வறுவல் செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுட வைத்து, அதில் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
பின், அந்த சுடு தண்ணீரை வைத்து ப்ரோக்கோலியை நன்றாக கழுவிவிட்டு அதை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, சமையல் எண்ணெயை ஊற்றி, வெங்காயம், தக்காளி பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
அது நன்றாக வதங்கியதும், ப்ரோக்கோலியை அதோடு சேர்த்து மூடிபோட்டு குறைந்த தீயில் வேக வைக்கவும்.
5 நிமிடம் ப்ரோக்கோலியை வேக வைத்துவிட்டு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீராக தூள், மிளகு தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீரும் ஊற்றி மூடி போடாமல் வேக வைக்கவும்.
ப்ரோக்கோலி வெந்தவுடன், மல்லி தழை தூவி பரிமாறவும்.