அன்பு என்ற பெயரில் உங்களை அழவைக்கிறார்களா? இது டாக்ஸிக் உறவாக இருக்கலாம்! கண்டறிவது எப்படி?
செய்தி முன்னோட்டம்
மனித வாழ்க்கை என்பது உறவுகளால் பின்னப்பட்டது. நண்பர்கள், குடும்பத்தினர், வாழ்க்கைத்துணை என யாரோ ஒருவரை சார்ந்துதான் நாம் வாழ்கிறோம். ஆனால், எல்லா உறவுகளும் நமக்கு மகிழ்ச்சியை தருவதில்லை. சில உறவுகள் 'அன்பு' என்ற பெயரில் நம்மை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சிதைக்கின்றன. இவற்றைத்தான் உளவியலாளர்கள் 'டாக்ஸிக் உறவுகள்' (Toxic Relationships) என்கின்றனர். காதலர் தினம் நெருங்கி வரும் நேரத்தில், இது போன்ற டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.
உறவு
இது டாக்ஸிக் உறவுதான் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
உங்கள் உறவில் பின்வரும் அறிகுறிகள் இருந்தால், நீங்கள் ஒரு நச்சுத்தன்மையான சூழலில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்: 1. பதற்றம்: அந்த நபரை சந்திக்கும்போதோ அல்லது பேச முற்படும்போதோ உங்களுக்குள் ஒருவித பயமும் பதற்றமும் ஏற்படுவது. 2. சுயநலம்: உங்கள் தேவைகளை மதிக்காமல், எப்போதும் தனது விருப்பங்களையே திணிக்கும் குணம். 3. சுயமரியாதை இழப்பு: உங்கள் கருத்துகளை மதிக்காமல் தாழ்த்திப் பேசுவது, அவமரியாதை செய்வது மற்றும் இழிவான சொற்களை பயன்படுத்துவது. 4. கண்காணிப்பு: நீங்கள் எங்குச் செல்கிறீர்கள், யாருடன் பேசுகிறீர்கள் என எப்போதும் வேவு பார்ப்பது மற்றும் உங்கள் முடிவுகளை அவர்களே எடுப்பது. 5. தனிமை: உறவில் இருந்தும் நீங்கள் தனிமையாக உணர நேரிடுவது.
தீர்வு
மீண்டு வருவது எப்படி?
வரையறைகளை வகுத்தல்: உங்களுக்கான எல்லைகளை நிர்ணயியுங்கள். உங்கள் சுயமரியாதையை யாரிடமும் விட்டுக்கொடுக்காதீர்கள். வெளிப்படையாகப் பேசுங்கள்: அந்த உறவு உங்களுக்குத் தேவை என்று கருதினால், உங்கள் பாதிப்புகளை அவரிடம் எடுத்துக்கூறுங்கள். அவர் மாற முற்படுகிறாரா என்பதைக் கவனியுங்கள். விலகி இருத்தல்: பல முயற்சிகளுக்கு பிறகும் மாற்றம் இல்லை எனில், அந்த உறவிலிருந்து விலகுவதே உங்கள் மன நலனுக்கு நல்லது. ஒரு உறவை இழக்கிறோம் என்று வருந்துவதை விட, உங்களை நீங்கள் மீட்டெடுக்கிறீர்கள் என்பதே உண்மை. பொருளாதார சுதந்திரம்: குறிப்பாகப் பெண்கள் நிதி ரீதியாகச் சுயமாகச் சம்பாதிப்பது, இத்தகைய இக்கட்டான சூழலில் தைரியமாக முடிவெடுக்க உதவும். நிபுணர் ஆலோசனை: தீர்க்க முடியாத சிக்கல்கள் இருந்தால், தயக்கமின்றி ஒரு மனநல ஆலோசகரை அணுகுங்கள்.