LOADING...
ஈவினிங் பிரிம்ரோஸ் செடிகளை வீட்டு பால்கனி தொட்டிகளில் வளர்ப்பது எப்படி?
ஈவினிங் பிரிம்ரோஸ் உங்கள் பால்கனி தொட்டிகளுக்கு ஒரு தனி அழகைக் கொடுக்கும்

ஈவினிங் பிரிம்ரோஸ் செடிகளை வீட்டு பால்கனி தொட்டிகளில் வளர்ப்பது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 24, 2026
06:09 pm

செய்தி முன்னோட்டம்

ஈவினிங் பிரிம்ரோஸ் செடி மிகவும் அழகான, எளிதாக பராமரிக்கக்கூடிய ஒரு செடி. இது உங்கள் பால்கனி தொட்டிகளுக்கு ஒரு தனி அழகைக் கொடுக்கும். இதன் பிரகாசமான மஞ்சள் பூக்கள் மாலை நேரங்களில் தான் பூக்கும். அதனால், சாயங்காலம் இயற்கையின் அழகை ரசிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு. இந்தச் செடிக்கு அதிக தண்ணீர் தேவைப்படாது (வறட்சியைத் தாங்கும்). பலவிதமான மண் வகைகளிலும் நன்றாக வளரும். அதனால், வீட்டிற்குள் தொட்டிகளில் செடி வளர்க்க நினைப்பர்களுக்கு இது ஒரு சரியான சாய்ஸ் பால்கனி தொட்டிகளில் ஈவினிங் பிரிம்ரோஸ் செடியை எப்படி வளர்ப்பது என்பதை இங்கே பார்ப்போம்.

குறிப்பு 1

சரியான தொட்டியைத் தேர்வு செய்தல்

ஈவினிங் பிரிம்ரோஸ் செடி நன்றாக வளர சரியான தொட்டியைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம் வேர்கள் நன்றாக பரவி வளர, குறைந்தது 12 இன்ச் அகலம் இருக்க்கும் தொட்டிகளைத் தேர்வு செய்ய வேண்டும் தண்ணீர் தேங்கி வேர்கள் அழுகி போகாமல் இருக்க, தொட்டியில் கண்டிப்பாக வடிகால் துளைகள் இருப்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் விருப்பத்திற்கும், பட்ஜெட்டிற்கும் ஏற்ற வகையில், மண் தொட்டியோ அல்லது பிளாஸ்டிக் தொட்டியோ பயன்படுத்தலாம்.

குறிப்பு 2

மண் தயாரிப்பு மற்றும் நடவு செய்தல்

ஈவினிங் பிரிம்ரோஸ் செடி, நல்ல வடிகால் வசதியுள்ள (தண்ணீர் தேங்காத) மண்ணில், pH அளவு 6 முதல் 8 வரை இருக்கும் போது செழிப்பாக வளரும். செடிகளை நடுவதற்கு முன், தொட்டி மண்ணுடன் (பாட்டிங் சாயில்) மணல் அல்லது பெர்லைட்டை கலந்து வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும். விதைகளை நேரடியாக மண்ணில் விதைக்கலாம், அல்லது நாற்றுகளை நடவு செய்யலாம். செடிகள் நன்றாக வளர, விதைகளுக்கும் அல்லது நாற்றுகளுக்கும் இடையில சுமார் 12 இன்ச் இடைவெளி அவசியம்.

Advertisement

குறிப்பு 3

தண்ணீர் பாய்ச்சுதல் மற்றும் பராமரிப்பு குறிப்புகள்

ஈவினிங் பிரிம்ரோஸ் செடி வறட்சியை தாங்கும் என்றாலும், சீரான தண்ணீர் பாய்ச்சுதல் அது நன்றாக வளர உதவும். மண்ணின் மேல் ஒரு இன்ச் அளவு காய்ந்த பின்னர், செடிக்கு நல்லா தண்ணீர் ஊற்றவேண்டும். அதிகமாக தண்ணீர் ஊற்றி செடி அழுகாமல் இருக்க, தொட்டியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதை உறுதி செய்யுங்கள். அதிக பூக்கள் பூக்கவும், செடி ஆரோக்கியமாக இருக்கவும், காய்ந்த பூக்களை அவ்வப்போது நீக்கி விடுங்கள்.

Advertisement

குறிப்பு 4

சூரிய ஒளி தேவை

ஈவினிங் பிரிம்ரோஸ் செடி நன்றாக பூக்க தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் நேரடி சூரிய ஒளி தேவை. உங்கள் தொட்டிகளை, நாள் முழுக்க நேரடி சூரிய ஒளி படும் இடத்துல் வையுங்கள். தெற்கு பார்த்த பால்கனி அல்லது முற்றங்கள் இதற்கு ஏற்றது. இயற்கையான சூரிய ஒளி போதவில்லையெனில், 'குரோ லைட்ஸ்' (grow lights) மாதிரியான மாற்று ஒளி மூலங்களைப் பயன்படுத்தலாம்.

Advertisement