இந்திய ஸ்டைல் வறுத்த பூண்டு ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
சீனாவில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுறுவி இன்று, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் கோலோச்சி வரும் ஒரு உணவு ஃப்ரைடு ரைஸ்.
இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்று ஃபிரைடு ரைஸ் எனக் கேட்டாலும், சுடச்சுட ஒரு பிளேட் நம்முடைய டேபிளுக்கு வரும். அதிலும், காரம் அதிகமாக அல்லது சாஸ் இல்லாமல் என பல்வேறு வெரைட்டிகளாக ஃப்ரைடு ரைஸ் பறிமாறப்படுகிறது.
அதில் ஒரு வெரைட்டியாக பூண்டின் சுவை தூக்கலாக இருக்கும் வறுத்த பூண்டு ஃப்ரைடு ரைஸை சமைக்கிறார்கள். இந்தியாவில் பூண்டை 5,000 ஆண்டுகளுக்கு முன்பு உபயோகித்ததாக தகவல்கள் உண்டு.
சீன சமையில் முறையில் இந்தியாவின் சமையல் பொருள் கலந்து உருவான உணவுகளுள் இந்த வறுத்த பூண்டு ஃப்ரைடு ரைஸும் ஒன்று எனக் கூறலாம். அதனை எப்படி செய்வது?
சமையல் குறிப்பு
தேவையான பொருட்கள்:
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - அரை
கேரட் - அரை
குடை மிளகாய் - அரை
பீன்ஸ் - 10
ஸ்வீட் கார்ன் - 3 தேக்கரண்டி
சோய் சாஸ் - 2 தேக்கரண்டி
சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
முட்டைகோஸ் - தேவையான அளவு
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
வேகவைத்த சாதம் - 4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சமையல் குறிப்பு
வறுத்த பூண்டு ஃப்ரைடு ரைஸ்: செய்முறை
முதலில் நமக்குத் தேவையான பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், கேரட், முட்டைகோஸ் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை நன்றாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அது சூடானவுடன் நறுக்கி வைத்திருக்கக்கூடிய பூண்டைச் சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அதில், நாம் நறுக்கி வைத்திருக்கிற இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும்.
அதனுடன், கேரட், குடைமிளகாய், பீன்ஸ் மற்றும் ஸ்வீட் கார்ன் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
சமையல் குறிப்பு
செய்முறை:
வதக்கும் போது, நாம் சேர்த்திருக்கும் காய்கறிகள் தேவைக்கும் மேல் வதங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், சிறிது நேரம் கழித்து நாம் எடுத்து வைத்திருக்கிற சில்லி சாஸ், சோயா சாஸ் மற்றும் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர், அதில் முட்டைகோஸ், மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வதக்கி விட வேண்டும்.
இறுதியாக, வேகவைத்த சாதம் மற்றும் அதற்கு தேவையான அளவு உப்பை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கினால் வறுத்த பூண்டு ஃப்ரைடு ரைஸ் ரெடி. ஆனால், சாதத்தை சேர்த்து வதக்கும் போது சாதம் உடைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.