LOADING...
இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளில் இப்படியொரு அபாயம் இருக்கிறதா? நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளில் சேர்க்கப்படும் தொழிற்சாலை நிறமூட்டிகள்

இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளில் இப்படியொரு அபாயம் இருக்கிறதா? நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 27, 2025
07:17 pm

செய்தி முன்னோட்டம்

அதிக நிறமூட்டப்பட்ட இனிப்புகள், சிற்றுண்டிகள் மற்றும் தெருவோர உணவுகளில் மனித நுகர்வுக்கு அனுமதிக்கப்படாத அபாயகரமான தொழிற்சாலை சாயங்கள் (Industrial Dyes) சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவது குறித்துப் பொதுச் சுகாதார எச்சரிக்கை எழுந்துள்ளது. இந்தத் தொழிற்சாலை சாயங்கள் மலிவாகக் கிடைப்பதால், இவை உணவுப் பொருட்களுக்கு அதிக நிறமூட்டி விற்பனையை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இது நீண்ட கால உள் உறுப்புப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சாயங்கள்

பொதுவாகப் பயன்படுத்தப்படும் அபாயகரமான சாயங்கள்

ஜவுளி மற்றும் காகிதத் தொழில்களுக்காகத் தயாரிக்கப்பட்ட இந்தச் சாயங்கள், இனிப்புகளில் கவர்ச்சிகரமான நிறமூட்டப் பயன்படுகின்றன. இதில் உள்ள சில அபாயகரமான சாயங்கள் பின்வருமாறு: ஆரமின் ஓ (Auramine O): இது மஞ்சள் நிறத்தை அளிக்கும். இந்தியாவில் இது தடை செய்யப்பட்ட சாயம். ரோடமைன் பி (Rhodamine B): சிகப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கும். சன்செட் எல்லோ (Sunset Yellow): இது புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் உருவாவதை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனினும், உணவுச் சாயங்கள் குறிப்பிட்ட அளவு அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தியாவில் இந்தியாவில் இனிப்புகளுக்கான அனுமதிக்கப்பட்ட உணவுச் சாயம் அளவு 100 mg/kg ஆகும்.

கண்டறிதல்

வீட்டிலேயே கண்டறிய எளிய வழி

ரோடமைன் பி போன்ற மேற்புறச் சாயங்கள் உணவில் கலக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய எளிய வழி உள்ளது. முதலில் சிறிய பஞ்சு அல்லது வெள்ளை துணியை எடுத்துக் கொள்ளவும். அதைச் சற்றுத் தண்ணீர் அல்லது எண்ணெய் கொண்டு லேசாக ஈரப்படுத்தவும். அதிக நிறமூட்டப்பட்ட இனிப்பு அல்லது சிற்றுண்டியின் மேற்பரப்பில் மெதுவாகத் துணியைக் கொண்டு தேய்க்கவும். துணியில் உடனடியாக சிவப்பு-ஊதா அல்லது பிரகாசமான இளஞ்சிவப்பு நிறம் படிந்தால், அது ரோடமைன் பி போன்ற தொழிற்சாலை சாயம் கலந்திருப்பதற்கான வலுவான அறிகுறியாகும். அனுமதிக்கப்பட்ட உணவுச் சாயங்கள் இவ்வளவு எளிதாகத் துணியில் படியாது. எனவே, நுகர்வோர் உணவுப் பொருட்களின் லேபிள்களையும் கவனமாகப் படிக்க வேண்டியது அவசியம்.

Advertisement