
நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள்
செய்தி முன்னோட்டம்
மகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் வீட்டில் விதவிதமான கொலு பொம்மைகள் வைத்து மக்கள் வழிபடுவர்.
நவராத்திரி என்றால் என்ன, கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவதின் பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிவனை வழிபடுவது சிவராத்திரி என்றால், அம்பிகையை வழிபடுவது நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. 'நவம்' என்றால் ஒன்பது என்று பொருள்.
அம்பாளை ஒன்பது ராத்திரிகள் வழிபடுவதால் இந்த விழாவிற்கு நவராத்திரி என பெயர் வந்தது. மேலும் அம்பாள், மகிஷாசுரனை வதம் செய்ய 9 நாட்கள் தவம் இருந்ததால் தான் நவராத்திரியை 9 நாட்களுக்கு கொண்டாடுகிறோம்.
2nd card
எதற்காக கொலு வைக்கப்படுகிறது?
முப்பெரும் தேவியராக விளங்கக்கூடிய மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவரும் தவம் செய்து ஒரே ரூபத்தில் வந்து மகிஷாசுரனை வதம் செய்ததாக நம்பப்படுகிறது.
இவ்வளவு பிரசித்தி பெற்ற நவராத்திரி விழாவை, வீட்டில் ஒன்பது நாட்களுக்கு கொலுவைத்து கொண்டாடப்படுகிறது.
மூன்று, ஐந்து, ஒன்பது, பதினோரு படிகள் வரை கொலு வைத்து மக்கள் கொண்டாடுவார்கள்.
கொலு வைப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது, படிப்படியாக மனிதனின் வாழ்க்கை உயர்கிறது என்று உணர்த்துவதற்காக என்றும்,
உயிரினங்கள் எப்படி படிப்படியாக தோன்றின என்பதின் வெளிப்பாடாகவும்,
இறுதியாக மனிதன் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் படிப்படியாக தான் முன்னேற வேண்டும் என்ற வாழ்வியல் நெறிமுறையை காட்டுவதற்காகவும் கொலு வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
3rd card
கொலு வைக்கும் முறை-1
தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டுள்ள ஓரறிவு, ஈரறிவு, மற்றும் மூன்று அறிவு என அவற்றின் அறிவு கேட்ப பொம்மைகளை கீழிருந்து மேலாக கொலு வைக்க வேண்டும்.
ஓரறிவு உயிரினங்களான மரம், செடி, கொடிகளை முதல் படியிலும், ஈரறிவு உயிரினங்களான நத்தை, சங்கு உள்ளிட்டவற்றை இரண்டாம் படியிலும் வைக்க வேண்டும்.
மூன்று அறிவு உயிரினங்களான கரையானை மூன்றாவது படியில் வைக்க வேண்டும். நான்கறிவு உயிரினமான நண்டை நான்காவது படியில் வைக்க வேண்டும்.
ஐந்து அறிவு கொண்ட பறவைகளையும், விலங்குகளையும் ஐந்தாவது படியில் வைத்து வழிபட வேண்டும். ஆறாவது படியில் மனிதர்களின் பொம்மைகளை வைக்கலாம்.
4th card
கொலு வைக்கும் முறை-2
ஏழாவது படி மனிதர்களில் இருந்து மகான்களாக, ஞானிகளாக உயர்ந்தவர்களின் படி. இதில் சுவாமி விவேகானந்தர், வள்ளலார் உள்ளிட்டவர்களின் பொம்மைகளை வைக்கலாம்.
எட்டாவது படிக்கட்டு அவதாரங்களுக்கான படி. அதில் 'தசாவதாரம்', 'அஷ்டலட்சுமி' அவதார பொம்மைகள் உள்ளிட்டவற்றை வைக்கலாம்.
ஒன்பதாவது படியில், முப்பெரும் தேவியர், மும்மூர்த்திகள், மற்றும் பூரண கலசத்தை வைத்து வழிபடலாம். சிலர் பூரண கலசத்தை முதல் படியிலும் வைத்து வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கொலு வைத்து 9 நாட்களுக்கு விரதமிருந்து அம்பாளை மக்கள் வழிபடுவர். வீட்டில் கொலு வைப்பதால் முப்பெரும் தேவிகளின் அருள் கிடைக்கும் எனவும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கூடும் எனவும், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் எனவும் நம்பப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
பல்வேறு கோவில்களில் நவராத்திரி பூஜைகள் ஆரம்பம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா தொடங்கியது
— Maalai Malar தமிழ் (@maalaimalar) October 15, 2023
மேலும் படிக்க : https://t.co/sKwrZiOVgE#navratri #ceremony #tirupati #MMNews #Maalaimalar pic.twitter.com/nyZ6OiHOHW