
அசைவ பிரியர்களே விரும்பும் 'செட்டிநாடு சைவ மீன் குழம்பு'
செய்தி முன்னோட்டம்
இந்த பதிவில் நீங்கள் பார்க்கவிருக்கும் சமையல் குறிப்பு, 'சைவ மீன் குழம்பு'. இது ஒரு செட்டிநாடு வகை குழம்பாகும்.
அசைவ பிரியர்களுக்கு கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, அதே ருசியில் இருக்கும் இந்த குழம்பில் சேர்க்கப்படும் பொருட்கள், காராமணி, பெருஞ்சீரகம் போன்றவை பல ஆரோக்கியமான நன்மைகளை கொண்டது.
அதனால் இது ஹெல்த்தியான சைவ மாறுதல். புரட்டாசி மாதத்தில், இந்த உணவை ட்ரை செய்து பாருங்கள்.
card 2
சைவ மீன் தேவையான பொருள்கள்
1 கப் - காராமணி
2 உலர்ந்த சிவப்பு மிளகாய்
3 பூண்டு கிராம்பு
1 தேக்கரண்டி - பெருஞ்சீரக விதைகள்
சுவைக்கேற்ற உப்பு
குழம்பு செய்ய தேவையான பொருள்கள்:
2 கப் - புளிக்கரைசல்
15 வெங்காயம் (துண்டாக்கப்பட்டது)
2 தக்காளி (நறுக்கப்பட்டது)
5 பூண்டு கிராம்பு
1/4 கப் - நல்லண்ணெய்
1/2 தேக்கரண்டி - கடுகு
1 தேக்கரண்டி - வெந்தயம்
கொஞ்சம் கரிவேப்பிலை
1 தேக்கரண்டி - மல்லித் தூள்
1 தேக்கரண்டி - மிளகாய்த் தூள்
சுவைக்கேற்ற உப்பு
card 3
செய்முறை
காராமணி பயரை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும்.
காய்ந்த சிவப்பு மிளகாய், பூண்டு பற்கள், பெருஞ்சீரகம். உப்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு பேக்கிங் தாளில் எண்ணெய் தடவி, அரைத்த விழுதை அதில் சமமாக பரப்பி, 5 நிமிடங்களுக்கு அவனில் (oven) வேகவைக்கவும்.
பின்னர், வெளியில் எடுத்து, நடுத்தரமான அளவுள்ள துண்டுகளாக சமமாக வெட்டிக்கொள்ளவும். சைவ மீன் துண்டுகள் தயார்!
ஒரு கடாயில், சிறிதளவு எண்ணெயை சூடாக்கி. சைவ மீன் துண்டுகளை அவை பொன்னிறமாக மாறும்வரை மேலோட்டமாக வறுக்கவும்.
card 4
செய்முறை
வேறொரு கடாயில் நல்லெண்ணையை சூடாக்கி, கடுகு, வெந்தயம், கரிவேப்பிலையை வறுக்கவும்.
மேலும் வெங்காயம், பூண்டு பற்கள், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி போல மாறியதும், உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள் உடன் புளிக்கரைசலைச் சேர்த்து, மீடியம் ஃபிளேம்மில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
card 5
செய்முறை
வறுத்த சைவ மீன் துண்டுகளை குழம்பில் சேர்த்து, கடாயை மூடி விடவும்.
இந்தக் குழம்பு நன்றாக கொதித்து, திக் ஆகி, எண்ணெய் தானாகப் பிரியும்வரை கொதிக்க வேண்டும்.
சூடான சாதத்தோடும், அப்பளதோடும் பரிமாறவும்.
இந்த வகை உணவு காரைக்குடியில் மிகவும் பிரபலம்