மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்களின் பட்டியல் இதோ!
ஆரோக்கியமான உணவுகள்: அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்யும் சிறிய மாற்றங்கள், உங்கள் உடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் சில பானங்களை இங்கே காணலாம். சூடான காபி: ஒரு கப் சூடான காபி, உங்கள் ஆற்றல் மட்டத்தை அதிகரித்து, உங்கள் மனநிலையை உயர்த்தும். மேலும் காபி, வளர்சிதை மாற்றத்தை (மெட்டபாலிசம்) அதிகரிக்கும். அதிலும் பால், சர்க்கரை இல்லாமல் தயாரிக்கப்படும் கடுங்காபி, உடல் எடையை குறைக்க உதவும். ஆப்பிள் சைடர் வினிகர்: அசிட்டிக் அமிலம், ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள முக்கியமான கொழுப்பை எரிக்கும் கலவை ஆகும். இந்த கலவை, இன்சுலின் அளவைக் குறைக்கிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, பசியை அடக்குகிறது மற்றும் கொழுப்பை கரைக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்கள்
இளநீர்: இளநீர் மிகவும் சத்தானது மற்றும் ஆரோக்கியமானது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், தொடர்ந்து குடித்து வந்தால் எடை குறையும். இளநீரில் பயோ-ஆக்டிவ் என்சைம்கள் உள்ளன. இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இஞ்சி தேநீர்: இஞ்சி ஆரோக்கியமான ஒன்றாகும். இது பல நிரூபிக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் எடையை குறைக்கவும் உதவுகிறது. இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், அதிக எடை காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும். எலுமிச்சை Detox நீர்: எலுமிச்சை detox நீர், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்தது. இது எடையை குறைக்க உதவுகிறது. தினசரி குடிநீரில் , சில ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்ப்பது நல்லது.