உங்கள் வீட்டு குட்டிஸ்களை கவரும் ஆலு-பன்னீர் பர்ட் நெஸ்ட்
இந்த வாரம் புதியதொரு சமையல் குறிப்புடன் உங்கள் வார நாளை துவங்கலாம். உருளைக்கிழங்கு வறுவல் பொதுவாக பலர் வீட்டிலும் செய்வதுண்டு. ஆனால் அதில் புதியதொரு ட்விஸ்ட் செய்து, இந்த சூப்பர் ஈவினிங் ஸ்னாக் செய்து பாருங்கள். இதன் ருசியை தாண்டி, இதை பரிமாறும் முறையே வித்தியாசமாக, உங்கள் வீடு குட்டிஸ்-ஐ கவரும் வகையில் இருக்கும். ஆலு-பன்னீர் பர்ட் நெஸ்ட் (Aloo-panneer bird nest) செய்முறை இதோ:
டிக்கி: தேவையான பொருட்கள்
1 கப் உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) ½ கப் பச்சை பட்டாணி ¼ கப் குடைமிளகாய் (நறுக்கியது) 2 தேக்கரண்டி பூண்டு (நறுக்கியது) 2 தேக்கரண்டி இஞ்சி (நறுக்கியது) 2 பச்சை மிளகாய் (நறுக்கியது) 1 தேக்கரண்டி மிளகாய் தூள் ½ தேக்கரண்டி மஞ்சள் தூள் 2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி 1 கப் பனீர் (துருவியது) உப்பு சுவைக்கேற்ப
பனீர் பால்ஸ், புதினா மற்றும் கொத்தமல்லி சட்னி: தேவையான பொருட்கள்
பனீர் பால்ஸ் அரை கப் பனீர் துருவியது ½ தேக்கரண்டி கருப்பு மிளகுதூள் உப்பு சுவைக்கேற்ப புதினா மற்றும் கொத்தமல்லி சட்னி 1 கப் புதினா இலைகள் (நறுக்கியது) ½ கப் கொத்தமல்லி இலைகள் 1 பச்சை மிளகாய் (நறுக்கியது) ½ எலுமிச்சை (சாறு) உப்பு ஒரு சிட்டிகை
செய்முறை
1. டிக்கிகளை உருவாக்க, ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து, நன்கு பிசையவும் 2. டிக்கிகளை வட்டமாக தட்டி, கூடு போல உருவாக்க, உங்கள் கட்டைவிரலால் நடுவில் ஒரு சிறிய பள்ளத்தை உருவாக்கவும். இப்போது இவற்றை கரைத்த மாவில், தோய்த்து, பின்னர் ஒரு தட்டில் பரப்பி வைக்கப்பட்டுள்ள வறுத்த சேமியாவில் மீண்டும் தோய்க்கவும். இப்போது இந்த டிக்கி பார்ப்பதற்கு மினியேச்சர் பறவை கூடு போல இருக்கும். 3. இந்த 'பறவைகளின் கூட்டை' 15 நிமிடங்களுக்கு தனியே வைக்கவும். 4.பின்னர், கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அதை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுக்கவும்
செய்முறை
5. பனீர் முட்டைகளுக்கு, பொருட்களை ஒரு கிண்ணத்தில் கலந்து, சிறிய முட்டைகளாக வடிவமைத்து, சூடான எண்ணெயில் 30 விநாடிகள் ஆழமாக வறுக்கவும். 6. இடைப்பட்ட நேரத்தில், மிக்ஸியில் அனைத்து சட்னி பொருட்களையும் கலந்து பச்சை சட்னி தயார் செய்யவும். 7. தற்போது அனைத்தும் ரெடியான பிறகு, 'பறவைகள் கூட்டை' எடுத்து,நடுவில் ஒரு ஸ்பூன் பச்சை சட்னி சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து, அதன் மேல் 3 சிறிய பன்னீர் முட்டைகளை வைத்து பரிமாறவும்.
இந்த காலவரிசையைப் பகிரவும்