ஊட்டச்சத்து நிறைந்த பேரீச்சம்பழத்தை தினசரி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
பேரீச்சம்பழம் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதனை தினமும் சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதற்காக அதிகமும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தினசரி 2 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டாலே உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அப்படி உங்கள் உடலில் பேரிச்சம்பழம் ஏற்படுத்தும் முக்கியமான நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
அனிமியாவை குணமாக்கும்: பேரீச்சம்பழம் இரும்புச்சத்து குறைவினை நீக்குவதில் உதவுகிறது. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் 0.9 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது. இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள், மூன்று அல்லது நான்கு பேரீச்சம்பழங்களை நீரில் ஊறவைத்து, அதனை மறுநாள் காலை சாப்பிடுவதால், இரத்த சோகை குணமாகும். இருதய செயழிலப்பை தடுக்கும்: பேரீச்சம்பழத்தில் உள்ள சாலிசிலேட் இரத்த நாளங்களில் ஏற்படும் உறைதலை தடுக்கும். இதனால் இரத்த ஓட்டம் சீராகிறது, மேலும் இதிலுள்ள நார்ச்சத்து கொழுப்பின் படிவத்தை தடுக்கிறது. மலச்சிக்கல் நீங்கும்: போதிய நார்ச்சத்து இல்லாமல் உண்ணும் உணவுகள் மூலம் ஏற்படும் மலச்சிக்கலை தீர்க்கப் பேரீச்சம்பழம் உதவுகிறது.
மேலும் சில நன்மைகள்
பேரீச்சம்பழம் எலும்புகள் வலிமையாக இருக்க உதவும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியத்தை கொண்டுள்ளது. வைட்டமின் கே உள்ளடக்கம் புதிய எலும்பு திசுக்களை உருவாக்க உதவுகிறது, இதனால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி போன்ற பிரச்சினைகள் நீங்குகின்றன. கேன்சர் வராமல் தடுக்கும்: பேரீச்சம்பழம் ஃப்ரி ரேடிக்கல்ஸை எதிர்க்கும் சக்தி கொண்டது. இது குறிப்பாக கோலன் கேன்சர் தடுப்பதில் உதவுகிறது. மேலும், ஞாபக மறதி, இரத்த அழுத்தம், நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் சரும பிரச்சினைகளை சீர்செய்யும்.