உலகிலேயே மகிழ்ச்சியற்ற வேலை எது தெரியுமா? 85 வருட ஆய்வறிக்கை பதில் தருகிறது
வேலைக்கு செல்லும் பலரும், அதில் இருக்கும் அழுத்தம், தூர பிரயாணம், சம்பளம் காரணமாக, தாம் செய்யும் வேலை, மகிழ்ச்சியற்றதாக புலம்புவதை கேட்டிருப்பீர்கள். ஆனால், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை வேறு பதிலை தருகிறது. உலகிலே மகிழ்ச்சியற்ற வேலை எது என்பதை அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 1938-இல் இருந்து, சுமார் 700 மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவு இது. அதன்படி, குழுவாக செயல்படாமல், தனித்து செயல்புரியும் வேலைகளே, உலகின் மகிழ்ச்சியற்ற வேலையாக கருதப்படுகிறது. மனநல மருத்துவப் பேராசிரியரும், ஹார்வர்ட் ஸ்டடி ஆஃப் அடல்ட் டெவலப்மென்ட்டின் இயக்குநருமான ராபர்ட் வால்டிங்கர், ஒர்க்-லைப் பாலன்ஸ் அடைவதற்கு, குழுக்களாக பணிபுரிய வேண்டும் என்கிறார். அதோடு, குழுப்பணியினால், உற்பத்தித்திறன் மற்றும் பணியாளர் மன உறுதி இரண்டும் அதிகரிக்கிறது என அவர் கூறுகிறார்.
மனித தொடர்பு இல்லாத வேலைகள் சந்தோஷமற்றது
ஆய்வின்படி, எந்த பணியிடங்களில், தங்களுடைய சக ஊழியர்களுடன் தொடர்புகொள்ள வாய்ப்புகள் இல்லையோ, அந்த பணியிடங்களில் இருப்பவர்கள், மகிழ்ச்சியற்ற ஊழியர்களாகவே இருப்பார்கள். ஹார்வர்ட் மருத்துவ பேராசிரியர் வால்டிங்கர் மேலும் கூறுகையில், வேலை திருப்தி என்பது வேலையின்போது, மக்களுடன், நீங்கள் எவ்வளவு இணைந்திருப்பீர்கள் என்பதோடு நேரடி தொடர்புடையது, என்கிறார். குறிப்பாக, கோவிட்-19 லாக்டவுனின் போது, அதிக மக்கள், தங்கள் வேலையில் மகிழ்ச்சியில் என ஒருவிதமான அழுத்தத்திற்கு ஆளானார்கள். அதோடு, அந்த காலகட்டத்தில், பலரும் வேலையை விட்டு மாற தொடங்கினர். அதற்கான உண்மை காரணம், தொற்றுநோய் காரணமாக, Work From Home என அனைத்து அலுவலகங்களும் முடிவெடுத்ததும், மக்கள் தங்கள் சக பணியாளர்களுடன், கூட்டாக வேலை செய்ய முடியாமல் போனது தான் என ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.