2023 புத்தாண்டு வாழ்த்துகள்: உங்கள் தீர்மானங்களை (resolution) கடைபிடிப்பதற்கான சில டிப்ஸ்கள்
2023-ஆம் ஆண்டு இன்னும் சில மணி நேரத்தில் பிறக்கப் போகிறது. எனவே புத்தாண்டை கொண்டாட அனைவரும் தயாராகி வருகிறார்கள். வரவிருக்கும் புத்தாண்டில் என்ன செய்யலாம் மற்றும் என்ன மாதிரியான உறுதிமொழிகளை எடுக்கலாம் என திட்டம் போட்டு இருப்பீர்கள். புத்தாண்டை வரவேற்பதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் வரவிருக்கும் ஆண்டிற்கான புதிய தீர்மானங்களை நிர்ணயிப்பதே ஆகும். புதிய நல்ல பழக்கங்களை உருவாக்கி கொள்ளுங்கள். ஏனெனில் நம்முடைய பழக்கவழக்கங்கள் எதிர்கால வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கிறது. எனவே அன்றாட வாழ்வில் நல்ல பழக்கங்களை வளர்த்து, உங்கள் வளர்ச்சிக்கு தடையை உருவாக்கும் கெட்ட பழக்கங்களை விட்டொழியுங்கள். உங்கள் வீட்டை அலங்கரித்து தேவையற்ற பொருட்களை அகற்றுங்கள். உங்களுக்கு தேவைப்படாத ஆடைகளை பிறருக்கு தானம் செய்யுங்கள்.
2023 புத்தாண்டில் இலக்கை அடைய சில வழிமுறைகள்
உங்கள் இலக்குகள் அல்லது தீர்மானங்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த 12 மாதங்களில் அவற்றை எவ்வாறு அடையப் போகிறீர்கள் என்று திட்டமிட்டு கொள்ளுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்கள் இலக்குகளை எளிதில் அடைய வாய்ப்புள்ளது. மாற்றம் என்பது கொஞ்சம் கடினமாக இருக்கல்லாம். நீங்கள் எதிர்பார்த்தவற்றை அடைய முடியாமல் போகலாம். எனவே உங்களுடைய சிறிய வெற்றிகளை கூட பாராட்டிக் கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட வரவு, செலவுகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். நேர்மையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். என்ன செய்யக்கூடாது என்பதை விட என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதன் மீது கவனம் செலுத்துங்கள். சரியாக திட்டமிடுவது, உங்களை நீண்ட கால வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும். எனவே இந்த வருடத்தை நன்றாகத் திட்டமிட்டு, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுங்கள்.