அடுத்த செய்திக் கட்டுரை

இது அது இல்ல! மீண்டும் வைரலாகும் கோர்டன் ராம்சேயின் இன்ஸ்டாகிராம் பதிவு
எழுதியவர்
Venkatalakshmi V
Mar 16, 2023
11:59 am
செய்தி முன்னோட்டம்
பிரபல சமையல் நிபுணரான கோர்டன் ராம்சே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமையல் குறித்த பதிவுகளை அவ்வப்போது வெளியிடுவதுண்டு. அவை பெரும்பாலும் மக்களால் ரசிக்கப்படுவதுண்டு.
இருப்பினும், சில நேரங்களில், அவரின் பதிவு சர்ச்சையை ஈர்ப்பதுண்டு. குறிப்பாக, இந்தியா உணவுகள் பற்றி அவர் பதிவிடும் போது, நம்மவர்கள் அதற்கு பல எதிர்மறை விமர்சனங்களை வைப்பதுண்டு.
சில நாட்களுக்கு முன்னர் அவர் செய்த பட்டர் சிக்கன் சமையல் வீடியோவும் அப்படி விமர்சனங்களை சந்தித்தது.
தற்போது, ரசிகர்களின் விமர்சனத்தை சந்தித்திருப்பது, அவர் பதிவிட்டிருந்த 'நாண்' வீடியோவிற்கு தான்.
"நாண், மிருதுவாகவும் மெல்லியதாகவும் இருக்க வேண்டும்... இது ப்ரெட் டோஸ்ட் போல் தெரிகிறது. ஆனால், உங்கள் மெனுவில் இடம்பெறுவதுதால், சுவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை." என்று ஒருவர் கூறியுள்ளார்.