புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'கோபி 65' செய்வது எப்படி?
உணவு குறிப்புகள்: கோபி 65 என்பது ஒரு பிரபலமான ஹோட்டல் அப்பிடைசர் மெனுக்களில் ஒன்றாகும். இந்த மிருதுவான காலிஃபிளவர் சிற்றுண்டியை வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ஓரளவு பெரிய காலிஃபிளவர் - 1 சோள மாவு - 4 தேக்கரண்டி கெட்டியான தயிர் - 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா - 1 சிட்டிகை ½ எலுமிச்சை உப்பு - தேவையான அளவு சிவப்பு மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - ½ தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு(எண்ணெயில் பொரித்தது)
'கோபி 65' செய்முறை:
காலிஃபிளவரை முதலில் சிறிய பூக்களாக பிரித்து எடுத்து கொள்ளவும். பின்னர், உப்பு, மஞ்சள் சேர்த்த தண்ணீரை கொதிக்க வைத்து, காலிஃபிளவரை அதில் கொட்டி 5 நிமிடம் மூடி வைக்கவும். 5 நிமிடம் ஆனதும், தண்ணீரை முழுவதுமாக வடிகட்டவும். தயிர், சோள மாவு, பேக்கிங் சோடா, உப்பு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றாக கலந்து திடமான மாவாக பிசையவும். தற்போது, அதனுடன் வடிகட்டிய காலிஃபிளவரை சேர்த்து, மாவு நன்றாக காலிஃபிளவரில் ஒட்டும்படி கிளறி வைத்து கொள்ளவும். கடாயை விருப்பமான எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானவுடன், காலிஃபிளவர் பூக்களை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின், வறுத்து எடுத்த கோபி 65-யில் கறிவேப்பிலையை தூவி பரிமாறவும்
இந்த காலவரிசையைப் பகிரவும்