LOADING...
நண்பர்கள் தினம்: வாரம் முழுவதுமான கொண்டாட்டங்களுக்கான ஒரு 'Glance'
ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 6 வரையிலான வாரத்தில், நண்பர்கள் தின கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்!

நண்பர்கள் தினம்: வாரம் முழுவதுமான கொண்டாட்டங்களுக்கான ஒரு 'Glance'

எழுதியவர் Venkatalakshmi V
Jul 26, 2023
03:37 pm

செய்தி முன்னோட்டம்

குதூகலமான சிரிப்பு, கேலி கிண்டல்கள், காதலுக்கு தூது முதல் பிரேக்-அப்பின் போது சாயும் தோள் வரை, உங்கள் கூட இருக்கும் ஒரே உறவு நட்பு மட்டுமே. அது ஒரு தெய்வீகமான உணர்வு. மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி, கால நேரமின்றி பேச, உங்களுக்கு ஒரு நண்பன் கிடைத்தால், உங்களை விட அதிர்ஷ்டசாலி உலகில் எவரும் இருக்கமாட்டார்கள். அப்படி ஒரு உறவு உங்களுக்கு அமைந்து விட்டால், காலமும், தூரமும் கூட உங்களை பிரிக்க முடியாது. எத்தனை காலம் கழித்து சந்தித்தாலும், விட்ட இடத்திலிருந்து தொடங்கும் ஒரே உறவு நட்பே! எனதாருயிர் நண்பனே, நட்பு அவ்வளவு சக்தி வாய்ந்தது மற்றும் விலைமதிப்பற்றது!

card 2

நண்பர்கள் தினத்தில், உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்த தயாராகுங்கள்

ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்று கிழமை, நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுகிறோம். உங்களில் பெரும்பாலோர் ஏற்கனவே உங்கள் நண்பர்களுக்கு பரிசளிக்க தேர்வு செய்து இருப்பீர்கள். வழக்கமான மீட்டிங், நண்பர்கள் குழுவுடன் அரட்டை போன்ற அரைத்த மாவையே அரைக்காமல், புதிதாக ஏதாவது செய்து உங்கள் நண்பர்களை அசத்த வேண்டுமா? கவலை வேண்டாம்! நியூஸ்பைட்ஸில் நாங்கள், GLANCE உடன் இணைந்து, உங்கள் நண்பரால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத நாளாக இந்நாளை மாற்ற, உங்களுக்கு உதவ இங்கே இருக்கிறோம் !

card 3

வழிகாட்டி: நட்பைக் கொண்டாட 7 நாட்களில் 7 வழிகள்

ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 6 வரையிலான வாரத்தில், நட்பைக் கொண்டாட நியூஸ்பைட்ஸ் மற்றும் க்லான்ஸ் இணைந்து, சில சுவாரசியமான யோசனைகளைச் சொல்ல போகிறோம். நண்பர்களுடன் ஜாலி ட்ரிப் போக திட்டமா? அதற்கும் எங்களிடம் பரிந்துரைகள் உள்ளன. நீங்கள் மறந்த நட்பை மீதும் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்களுக்கு தேவையற்ற சங்கோஜங்களை நீக்கி, அதற்கான வழிகளை உங்களுக்குத் தெரிவிப்போம்! கதைப்போமா?

Advertisement

card 4

இந்த நட்பு வழிகாட்டியில் வேறு என்ன எதிர்பார்க்கலாம்?

இந்த நண்பர்கள் தின விழாவை, ஒரு வார விழாவாக கொண்டாடுவதற்கான வழிகள், ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 6 வரை, உங்கள் நண்பருக்கு வழங்குவதற்கான தனித்துவமான பரிசுகள், அவர்களுடன் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சாகச விளையாட்டுகள், பழங்கதைகளை பேச சில சுற்றுலா தளங்கள், வரலாற்றில் இடம்பிடித்த நட்பு கதைகள், வயதுக்கு ஏற்ப முதிர்ச்சியடையும் நட்பு மற்றும் இந்த புனிதமான பந்தத்தின் முக்கியத்துவம் போன்றவற்றை பற்றி உங்களுக்கு ஒரு GLANCE!

Advertisement

card 5

GLANCE பற்றி:

2019இல் நிறுவப்பட்ட Glance நிறுவனம், ஒரு நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாகும். க்ளான்ஸ் நிறுவனமானது, Roposo, Nostra உள்ளிட்ட பிரபல டிஜிட்டல் தளங்களை நுகர்வோருக்கு வழங்குகிறது. Lock Screen-இல் இணையம் பயன்படுத்தப்படும் விதத்தை, Glance மறுவரையறை செய்துள்ளது. உங்கள் பயன்பாடுகளைத் தேடுவதற்கும், பதிவிறக்குவதற்குமான தேவையை நீக்குகிறது,Glance. Glance-இன் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், இணைய அனுபவத்துடன், 400 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களில் தற்போது இயக்கப்படுகிறது. கிரியேட்டர் தலைமையிலான நேரடி பொழுதுபோக்கு வர்த்தகத்திற்கான இலக்கைத் தொடங்குவதன் மூலம், ரோபோசோ, வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட, Glance நிறுவனம், InMobi குழுமத்தின் ஒருங்கிணைக்கப்படாத துணை நிறுவனமாகும். மேலும் தகவலுக்கு, glance.com, roposo.com மற்றும் inmobi.com ஐப் பார்வையிடவும்.

card 6

NewsBytes பற்றி:

நியூஸ்பைட்ஸ் இந்தியாவின் முன்னோடி ஊடக தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது, தனித்துவமாக, AI-துணையுடன் பல மொழிகளில் செய்திகளை வழங்கும் ஒரே நிறுவனம் நியூஸ்பைட்ஸ். நியூஸ்பைட்ஸில், ஊடக சந்தையில் உள்ள மிக முக்கியமான சவாலாக கருதப்படும், மனித தலையீட்டின் தேவையைக் குறைத்து, பல்வேறு ஊடக வடிவங்களில் உயர்தர உள்ளடக்கத்தை வழங்குதலையே தலையாய கடமையாக கொண்டுள்ளோம். உங்களுக்கு விருப்பமான செய்திகளை, தமிழ் மொழியில் இயங்கும் NewsBytes Tamilஇல் காணலாம்.

Advertisement