
நண்பர்கள் தினம்: நீண்டநாள் நண்பர்களுக்குள் ஏற்படும் பிளவுகளை எப்படி தீர்ப்பது?
செய்தி முன்னோட்டம்
சர்வதேச நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது.
நண்பர்கள் தினமான இன்று, நீண்டநாள் நண்பர்களுக்குள் ஏற்படும் பிளவுகளை எப்படி தீர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
நீண்டகாலமாக ஒரு நட்புறவை பேணுவது கடினமான காரியம் தான். நல்ல ஒரு நட்புக்கு புரிதல், அக்கறை மற்றும் அர்ப்பணிப்பு மிகவும் அவசியமாகும்.
அதில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் நட்பில் பிளவு ஏற்பட்டு விடும். அப்படி நட்பை பாதிக்கும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
சமூக பதட்டம் மற்றும் தன்-நம்பிக்கை இல்லாதது
அடுத்தவர்களும் நண்பர்களும் என்ன நினைப்பார்கள் என்பதை அதிகமாக யோசிப்பதால், பல நட்புறவுகள் முறிந்து போவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கவ்க்ப்ஜ்க்
மனம் திறந்து பேசுவதற்கு பயப்படுவது
மற்றவர்களிடம் மனம் திறந்து உணர்வுகளை பகிர்ந்துகொள்ள பயப்படுவதாலும், நட்புறவுகள் பாதிக்கப்படக்கூடும். நண்பர்களுடன் நெருக்கமாவதற்கு நம்பிக்கையும் உண்மைதன்மையும் மிக அவசியமாகும்.
அதிகமாக உணர்வுகளை வெளிப்படுத்துவது
அதிகமாக கோபப்படுவது, கடிந்துகொள்வது, போன்றவை நட்பை மட்டும் அல்ல எந்த ஒரு உறவையும் பாதிக்கக்கூடும்.
பரஸ்பர அக்கறை இல்லாதது
தன்னை பற்றி மட்டுமே யோசித்து கொண்டு தனது நண்பரின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பது குறித்து அக்கறை இல்லாமல் இருப்பதாலும், நண்பர்களுக்குள் பிளவு ஏற்படலாம்.
போட்டி, பொறாமை
நண்பர்களின் வெற்றிகளுக்கு சந்தோசப்படாமல், பொறாமைப்படுவதால், நண்பர்களுக்கு இடையில் வெறுப்பு மட்டுமே அதிகரிக்கும்.
குறைந்த அர்ப்பணிப்பு
நட்பைத் தொடர்ந்து பேணுவதற்கு நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்யாவிட்டாலும், நட்புகள் முறிந்து போக வாய்ப்பிருக்கிறது.