Page Loader
மைக்ரோவெவ் ஓவனில் சூடு செய்யக்கூடாத பதார்த்தங்கள் எவை எனத்தெரியுமா?
ஓவனில் சூடு செய்யக்கூடாத பதார்த்தங்கள் எவை?

மைக்ரோவெவ் ஓவனில் சூடு செய்யக்கூடாத பதார்த்தங்கள் எவை எனத்தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 06, 2023
12:33 pm

செய்தி முன்னோட்டம்

வியர்வையில் அடுப்பங்கரையில் சமைக்கும் கொடுமை, அதை தினம்தினம் அனுபவிக்கும் இல்லத்தரசிகளுக்கு மட்டுமே தெரியும். அதிலும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு டபுள் அவஸ்தை! அவசரகதியில், வீட்டில் இருப்பவர்களுக்கும் சமைத்து, குழந்தைகளுக்கு லஞ்ச்பேக் பேக் செய்து, கணவன்மார்களுக்கும், தனக்கும் சாப்பாடை கட்டிக்கொண்டு அலுவலகம் செல்வதற்குள் 'ஹப்பாடா' என மூச்சுவிட தோன்றும். அவர்களுக்கு எல்லாம் மைக்ரோவெவ் ஓவன் ஒரு வரப்பிரசாதம் தான். பலரின் வீட்டிலும், சிலரின் அலுவலகங்களில் கூட தற்போது ஓவன் பயன்பாட்டில் உள்ளது. உணவை சமைப்பது, சூடு செய்வது, வெறுப்பது, பேக்கிங் என அதன் பயன்பாடு அதிகம். எனினும், ஒரு சில பதார்த்தங்களை ஓவனில் சூடு செய்யக்கூடாது என்கிறார்கள் உணவு நிபுணர்கள். அவை என்ன தெரியுமா?

card 2

ஓவனில் சூடு செய்யக்கூடாத பதார்த்தங்கள்

வறுத்த உணவு: வறுத்த உணவுகளை ஓவனில் ஹீட் செய்யும்போது, அதில் உள்ள மொறுமொறுப்பு தன்மை நீங்கி, அதில் உள்ள எண்ணெய் காரணமாக ஈரமாக மாறக்கூடும். அதனால் அதன் ருசியும், மனமும் மாறிவிடும். அவித்த முட்டை:வேக வைத்த முட்டையில், நிறைய நீர் இருக்கும். அவை மைக்ரோவேவின் கதிர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, ​​​​நீராவியாக மாறும். அதனால் அழுத்தம் உண்டாகி, முட்டை வெடித்துவிடும். கடல் உணவு: எப்பொழுதும், கடல் உணவுகளை மைக்ரோவேவ் பயன்படுத்தி சமைக்கக்கூடாது என்கிறார்கள் உணவு நிபுணர்கள். அதையும் தாண்டி, அவற்றை சூடு செய்யும்போது, உணவை மேலும் ரப்பர் போல மாற்றி விடும். சாதம்: சாதத்தை மீண்டும் சூடாக்குவது ஒரு வகை உணவு விஷத்தை ஏற்படுத்தலாம். செரியஸ் பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கும்.