Page Loader
தமிழகத்தில் பரவும் ஃப்ளூ காய்ச்சல் - பரவலை தடுக்க மருத்துவ அறிவுறுத்தல்கள் வெளியீடு
தமிழகத்தில் பரவும் ஃப்ளூ காய்ச்சல் - பரவலை தடுக்க மருத்துவர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் பரவும் ஃப்ளூ காய்ச்சல் - பரவலை தடுக்க மருத்துவ அறிவுறுத்தல்கள் வெளியீடு

எழுதியவர் Nivetha P
Nov 27, 2023
08:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஃப்ளூ காய்ச்சல் பரவுகிறது. இதற்கிடையே இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?என்று மருத்துவ அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி , 'இந்த ஃப்ளூ காய்ச்சல் இன்ப்ளூயன்சா-A,B,C வைரஸ்கள் மூலம் பரவும். மூச்சுத்திணறல், காய்ச்சல், சளி, உடல்சோர்வு, மூக்கில் நீர் வடிதல், தலைவலி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள்' என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த காய்ச்சல் H1N1 மற்றும் H3N2 உள்ளிட்ட வைரஸ் காரணமாகவும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய இந்த காய்ச்சல், 7 நாட்கள் வரை இருக்கும் என்றும், தும்மும் போதும், இரும்பும் போதும் மிகவேகமாக மற்றவர்களுக்கு பரவக்கூடியது என்றும் கூறப்படுகிறது.

மருத்துவர் 

நோய் பரவலை தடுக்க மற்றும் குணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் 

இந்நிலையில் இதனை தடுக்க குடிநீரை நன்றாக கொதிக்கவைத்து குடிக்க வேண்டும். மற்றவர்களது தண்ணீரை வாங்கி குடிக்காமல் இருப்பது நல்லது. தொண்டைவலி இருப்பவர்கள் வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும் நீங்கும். வெளியில் வந்தவுடன் கை, கால்களை சுத்தமாக கழுவிய பின்னர் வீட்டிற்குள் செல்வது நலம். புரதச்சத்து மற்றும் வைட்டமின்-சி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் மாஸ்க் அணிந்துக்கொள்ள வேண்டும். இன்ப்ளூயன்சா தடுப்பூசிகள் இந்தியாவில் கட்டாயமில்லை என்னும் நிலையில், மருத்துவரின் அறிவுறுத்தல்படி, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், HIV இருப்பவர்கள் போட்டு கொள்ளலாம். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு நீர்சத்து இழந்திருக்கக்கூடும் என்பதால் அதிகளவு தண்ணீர் குடிப்பதோடு, நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.