1900களின் முற்பகுதியில் நிலவிய சில அபத்தமான டேட்டிங் வழக்கங்கள்!
இந்த டிஜிட்டல் யுகத்தில், நேரில் காணாமலேயே காதல் என ஆரம்பித்து, லிவ்-இன் உறவுகள் வரை வளர்ந்து விட்டது. ஆனால், முற்காலத்தில் அப்படி இல்லை. காதலர் தினம் நெருங்கும் இவ்வேளையில், 1900களின் முற்பகுதியில் நிலவிய சில அபத்தமான டேட்டிங் வழக்கங்களை பற்றி காண்போம். பெண்கள், 30 வயதை கடந்தால் ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டும், காத்திருக்கக் கூடாது: அக்காலத்தில், பெண்களுக்கு வயது கூடக்கூட அவர்கள் திருமணதிற்கான தகுதியை இழந்து வருகின்றனர் எனவும் நம்பப்பட்டது. உணவகத்தை விட்டு பெண்கள் தான் முதலில் வெளியேற வேண்டும்: டேட்டிற்கு செல்லும்போது, உணவருந்திய பின்னர், பெண்களே முதலில் உணவகத்தை விட்டு வெளியேற வேண்டும். உணவருந்திய பின்னரும், ஒரு ஆணுடன், பெண் நீண்ட நேரம் செலவிடுவது தவறாக பார்க்கப்பட்டது.
அபத்தமான டேட்டிங் வழக்கங்கள்!
பெண்கள், உணவகபணியாளர்களிடம் உரையாடக்கூடாது: இரவு உணவருந்த செல்லும் போது, ஒரு பெண் அவருடனிருக்கும், ஆணைத் தவிர வேறு யாருடனும் உரையாடலில் ஈடுபடுவது பொருத்தமற்றதாகக் கருதப்பட்டது. நடனமாடும் போது பேசக்கூடாது: ஒருவருடன் நடனமாடும் போது, உரையாடுவது முறையற்றது எனக்கூறப்பட்டது. நடனம் என்பது ஒருவருடைய நளினத்தையும், திறமையையும் காட்டும் ஒரு வழியாக பார்க்கப்பட்டது. எனவே அந்த நேரத்தில் உரையாடுவது, அவர்களின் கவனத்தை சிதறடிக்கும் வழியாக கருதப்பட்டது. உங்களை பற்றி வெளிப்படுத்தக்கூடாது: பொதுவாகவே, உரையாடலின் போது, உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்ட கூடாது. இலைமறைக்காயாக, அனைத்தையும் ஒரேயடியாக வெளிபடுத்துவதை விட, மெதுவாக வெளிப்படுத்துவதும் அப்போது வழக்கமாக இருந்தது.