காதலர் தினம் 2023: இன்று (பிப்.,13) கிஸ் டே; பல்வேறு வகையான முத்தங்களும், அதன் அர்த்தங்களும் தெரிந்து கொள்க
காதலர் தின வாரத்தில், இன்று கிஸ் டேயாக கொண்டாடப்படுகிறது. உணர்ச்சிகளைக் காட்ட, வார்த்தைகள் போதுமானதாக இல்லாதபோது, ஒரு மென்மையான முத்தம் உதவும். இதன் மூலம், உங்கள் அன்புக்குரியவர் மீது, நீங்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் உணர்த்தவும் உதவுகிறது. இந்த நாள், காதல் உறவுகளில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் உள்ள அன்பையும், முத்ததின் மூலம் வெளிப்படுத்தலாம். இந்நாளில், காதலர்கள், முத்தத்துடன் பல பரிசுகளையும் வழங்கி காதலை வெளிப்படுத்தலாம். ஒரு ரோஜா பூ, அழகிய கேக், வாழ்த்து அட்டை என நீங்கள் தரும் பரிசு, அவர்களுக்கு உங்கள் காதலின் மதிப்பை காட்டும். அதே நேரத்தில், முத்தங்களில் பல வகை உண்டென்பதை அறிவீர்களா? பல வகையான முத்த வகைகளும், அவற்றின் அர்த்தங்களும் பின்வருமாறு:
முத்த வகைகள் மற்றும் அவற்றின் அர்த்தங்கள்
கன்னத்தில்: நெருங்கி பழகும் நபருக்கு தரப்படும் முத்த வகை. நெற்றியில்: இவ்வகை முத்தம், பாதுகாப்பு மற்றும் போற்றுதலைக் குறிக்கும். கைகளில்: கைகளில் முத்தமிடுவதும் ஒரு மரியாதை மற்றும் போற்றுதலை குறிப்பது போலதான். காதல் உறவில், இது ஒரு உறவைத் தொடங்குவதற்கான ஆர்வத்தின் அடையாளம். எஸ்கிமோ (மூக்கு) முத்தம்: ஆர்டிக் காண்டத்தில், எஸ்கிமோக்கள் கண்களையும், மூக்கையும் தவிர அனைத்து பாகங்களையும் மூடி இருப்பார். அதனால், அவர்கள், மூக்கை உரசிக்கொண்டு, தங்கள் அன்பை பரிமாறிக்கொள்வார்கள். அதனால், இவ்வகை முத்தத்திற்கு 'எஸ்கிமோ', அல்லது 'இன்னுயிட்' முத்தம் என்று பெயர். காது மடல் மற்றும் கழுத்து முத்தம்: இந்த வகையான முத்தம் பொதுவாக பாலியல் நோக்கங்களைத் தெரிவிக்கிறது. இது போக, அனைவருக்கும் தெரிந்த பிரஞ்சு முத்தமும் ஒரு வகை.