உடல் ஆரோக்கியம்: மறதியை தூண்டக்கூடிய சில உணவுகள்
மனிதனின் மூளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இருந்தால், நினைவாற்றல் பெருகும் என்பது பல மருத்துவ ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு. எனினும் மனிதன் உண்ணும் உணவுகளில் சில, நினைவாற்றலை பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறதியை தூண்டக்கூடிய சில உணவுகளின் பட்டியல் இது: எண்ணையில் பொறித்த உணவுகள்: எண்ணையில் பொறித்த, பிரெஞ்ச் ப்ரைஸ், சிக்கன், மீன் வறுவல் போன்ற உணவுகள் மறதியை தூண்டும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இவ்வகை உணவுகள், உடலில் அழற்சியை உண்டாக்கும் தன்மை உடையது. இதனால், உங்கள் ரத்த நாளங்கள் சேதமாகும். சுத்திகரிக்கப்பட்ட ரொட்டி, பாஸ்தா வகைகள்: இவ்வகை உணவுகளில் உயர் கிளைசெமிக் குறியீடுகள் உள்ளதால், உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கலாமென நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உங்கள் நினைவாற்றல் திறன் பாதிக்கப்படலாம்.
கொழுப்பு நிறைந்த சீஸை தவிர்க்கலாம்!
காய்கறி எண்ணெய்கள்: சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணெய்களில் அழற்சி கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. அவை உங்கள் மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் மற்றும் அல்சைமர் நோய் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். இது மனச்சோர்வு மற்றும் பிற அறிவாற்றல் சிக்கல்களைத் தூண்டும். அதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் உபயோகிக்கலாம். சீஸ்: கொழுப்புகள் நிறைந்த இந்த சீஸ், உங்கள் மூளை நாளங்களை அடைத்து வீக்கத்தை ஏற்படுத்தும். அதனால், நினைவாற்றல் குறைபாடு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அமெரிக்கன் சீஸ், மொஸரெல்லா சீஸ் போன்ற சீஸ் வகைகள் அல்சைமர் நோயுடன் தொடர்புடைய புரதங்களை உடலில் உருவாக்குகின்றன. அதற்கு பதிலாக, வெண்ணெய் போன்ற தாவர அடிப்படையிலான மாற்றுகளை உபயோகப்படுத்தலாம்.