Loading...
இனி ஊசி போட தேவையில்லை! கெட்ட கொழுப்பை 60% வரை குறைக்கும் புதிய மாத்திரைக்கு ஒப்புதல்
ஊசி போடாமல் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் புதிய மாத்திரையை பயன்படுத்த FDA ஒப்புதல்

இனி ஊசி போட தேவையில்லை! கெட்ட கொழுப்பை 60% வரை குறைக்கும் புதிய மாத்திரைக்கு ஒப்புதல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 27, 2026
01:44 pm

செய்தி முன்னோட்டம்

இதய நோய் சிகிச்சையில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் (LDL) கணிசமாகக் குறைக்கும் லிப்ஃபெண்ட்ரா என்ற புதிய மாத்திரைக்கு அமெரிக்க உணவகம் மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை ஊசி மூலம் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த பிசிஎஸ்கே9 தடுப்பு சிகிச்சைக்கு மாற்றாக, தினமும் ஒருவேளை உட்கொள்ளும் இந்த வாய்வழி மாத்திரை, கெட்ட கொழுப்பை கிட்டத்தட்ட 60 சதவீதம் வரை குறைப்பதாக மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

செயல்பாடு

லிப்ஃபெண்ட்ரா மாத்திரை செயல்படும் விதம்

பிசிஎஸ்கே9 இன்ஹிபிட்டர் பிரிவை சேர்ந்த இந்த லிப்ஃபெண்ட்ரா மருந்து, கல்லீரலில் இருந்து ரத்தத்தில் உள்ள அதிகப்படியான எல்டிஎல் (LDL) கெட்ட கொழுப்பை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

சில வாரங்களுக்கு ஒருமுறை ஊசி போடும் வழக்கமான முறைக்கு மாறாக, இதனைத் தினமும் ஒருவேளை மாத்திரையாக எடுத்துக்கொள்ளலாம் என்பதால் நோயாளிகளுக்குப் பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும்.

மரபணு ரீதியாக அதிக கொழுப்புப் பிரச்சனையால் (HeFH) பாதிக்கப்பட்டு, இளவயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் கொண்ட நபர்களுக்கு இது சிறந்த தீர்வாகும்.

மருத்துவ ஆய்வு

மருத்துவ ஆய்வுகளில் வெளியான சிறப்பான முடிவுகள்

அதிக அளவிலான ஸ்டாடின் (Statin) மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகும் கெட்ட கொழுப்பு குறையாத 3,207 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையிலேயே FDA இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்த ஆய்வில் லிப்ஃபெண்ட்ரா மாத்திரையை 24 வாரங்கள் தொடர்ந்து உட்கொண்ட நோயாளிகளுக்கு எல்டிஎல் கெட்ட கொழுப்பின் அளவு சராசரியாக 56 முதல் 59 சதவீதம் வரை குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.

தற்போது புழக்கத்தில் உள்ள ஊசி சிகிச்சைகளுக்கு இணையான பலனை இந்த மாத்திரை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாற்று

ஸ்டாடின் மருந்துகளுக்கு மாற்றாக அமைமா?

இந்த புதிய மாத்திரை கொழுப்பைக் குறைக்க பெரும் உதவியாக இருந்தாலும், இது ஸ்டாடின் மருந்துகளுக்கு மாற்றாக அமையாது என்று இதய நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பல தசாப்தங்களாக மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைக் குறைப்பதில் ஸ்டாடின் மாத்திரைகளே முதன்மை சிகிச்சையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே, அதிகபட்ச ஸ்டாடின் மருந்துகளை எடுத்த பிறகும் கொழுப்பு குறையாத உயர் ஆபத்து கொண்ட நோயாளிகளுக்கும், ஊசி சிகிச்சையை சகித்துக்கொள்ள முடியாதவர்களுக்கும் மட்டுமே இந்த புதிய மாத்திரை பரிந்துரைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

விற்பனை

இந்தியாவிற்கு எப்போது விற்பனைக்கு வரும்?

அமெரிக்காவில் எஃப்டிஏ ஒப்புதல் பெற்றிருந்தாலும், இந்திய நோயாளிகள் இந்த மாத்திரையைப் பெற இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

இந்திய விதிகளின்படி, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த மருந்தை நாட்டில் விற்பனை செய்ய முடியும்.

இதற்கு இந்திய நோயாளிகளிடம் கூடுதல் மருத்துவ ஆய்வுகள் தேவைப்படலாம் என்பதால், இந்த அனுமதி நடைமுறைகள் நிறைவடைந்து இந்திய மருந்தகங்களுக்கு வர சில காலம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT