இந்த பழங்களை தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது
ஆரோக்கியம்: பழங்கள் என்றாலே அதன் தோலை சீவி சாப்பிடும் பழக்கத்தை நாம் வைத்திருக்கிறோம். அப்படி சாப்பிட்டால் தான் ருசியாக இருக்கும் என்று நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால், சில பழங்களை தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. அதுபோன்ற பழங்கள் சிலவற்றை இப்போது பார்க்கலாம். ஆப்பிள் ஆப்பிளின் தோலில் வைட்டமின்கள்-A, C மற்றும் K நிறைந்துள்ளன. மேலும், அது பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. எனவே, ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். டிராகன்-பழம் டிராகன் பழத்தின் இளஞ்சிவப்பு நிற தோல் மிகவும் ஆரோக்கியமானதாகும். ஏனெனில், அதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் பீட்டாசயனின் ஆகியவை ஏராளமாக உள்ளன. மேலும், அதில் ஆந்தோசயனின் உள்ளதால், அது உடல் எடையை குறைக்க உதவும்.
பேரிக்காய்
பேரிக்காயை தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஏனென்றால், அதன் தோலில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து பேரிக்காயின் தோலில் அதிகம் உள்ளது. நாட்பட்ட நோய்கள் வருவதை ஆக்ஸிஜனேற்றிகள் தடுக்கும் அதே வேளையில், நார்ச்சத்து பசியை நன்கு போக்கும். கொய்யா கொய்யா தோலில் சருமத்திற்கும் கூந்தலுக்கும் அதிக நன்மை பயக்கும் சத்துக்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், முகப்பருவைத் தடுக்கும் சத்துகளும், தோல் செல் மீளுருவாக்கம் செய்யும் கூறுகளும், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் சத்துகளும் கொய்யா பழத்தின் தோலில் அதிகம் உள்ளது. மேலும், கொய்யா பழத்தின் தோல், சருமத்தை பிரகாசமாக வைத்திருக்கவும், கரும்புள்ளிகளை குறைக்கவும் பெரிய அளவில் உதவும் ஒரு இயற்கை மருந்தாகும்.