Loading...
தீபாவளி கிளீனிங் டிப்ஸ்: வீட்டில் அடுப்பு, டைல்ஸ் கறைகளை அகற்ற பேக்கிங் சோடா பயன்படுத்தலாம்
பேக்கிங் சோடாவால் பிடிவாத கறைகளை எளிதாக அகற்றலாம்.

தீபாவளி கிளீனிங் டிப்ஸ்: வீட்டில் அடுப்பு, டைல்ஸ் கறைகளை அகற்ற பேக்கிங் சோடா பயன்படுத்தலாம்

எழுதியவர் Vasuki
Oct 26, 2026
03:39 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், வீட்டை முழுமையாக சுத்தம் செய்யும் பணிகளில் பொதுமக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக சந்தைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த ரசாயன கிளீனிங் திரவங்களை வாங்கி பணத்தை வீணாக்குவதைத் தவிர்த்து, சமையலறையில் உள்ள பேக்கிங் சோடா மூலமாகவே பிடிவாதமான அழுக்குகளை எளிதாக அகற்ற முடியும். வீட்டின் பல்வேறு பகுதிகளில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்குகள், நீர்க்கறைகள் மற்றும் துர்நாற்றத்தைப் போக்க பேக்கிங் சோடாவை முறையாகப் பயன்படுத்துவது குறித்து நிபுணர்கள் சில எளிய வழிமுறைகளைப் பரிந்துரைக்கின்றனர்.

சுத்தம் செய்யும் முறை

அடுப்பு, சமையலறை மேடை மற்றும் சிங்க் 

சமையலறை மேடை, அடுப்பு மற்றும் அதன் பின்புற டைல்ஸ்களில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்குகளை நீக்க, 3 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பேஸ்ட் போலக் குழைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட்டை அழுக்கு படிந்த இடங்களில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து, மென்மையான ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்துத் துடைத்தால் பிசுக்குகள் அகன்று பளபளக்கும்.

அதேபோல், சமையலறை சிங்க் மற்றும் அதன் வடிகால் குழாய்களில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க, சிறிதளவு பேக்கிங் சோடாவைத் தூவித் தேய்த்துக் கழுவலாம்.

குழாய் துர்நாற்றத்திற்கு அரை கப் பேக்கிங் சோடாவுடன் அரை கப் வெள்ளை வினிகர் சேர்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

உப்பு கறைகள்

ஃபிரிட்ஜ் மற்றும் சோபா பராமரிப்பு

குளியலறை டைல்ஸ்கள் மற்றும் குழாய்களில் படிந்துள்ள உப்பு மற்றும் சோப்புக் கறைகளை அகற்ற பேக்கிங் சோடா பேஸ்ட்டைத் தடவி மென்மையான பிரஷ் மூலம் தேய்த்துக் கழுவலாம்.

ஆனால், மார்பிள், கிரானைட் மற்றும் தங்கம் முலாம் பூசப்பட்ட குழாய்களில் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ஃபிரிட்ஜின் உள்பகுதியில் ஏற்படும் உணவு வாசனையைப் போக்க, வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவைக் கலந்து துடைத்தெடுக்கலாம்.

மேலும் சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை நிரப்பி ஃபிரிட்ஜின் மூலையில் வைத்தால் துர்நாற்றம் உறிஞ்சப்படும்.

சோபா மற்றும் மெத்தைகளில் ஏற்படும் ஈரப்பத துர்நாற்றத்திற்கு அவற்றின் மீது பேக்கிங் சோடாவைத் தூவி, 30 நிமிடங்களுக்குப் பிறகு வாக்யூம் கிளீனர் கொண்டு உறிஞ்சி எடுக்கலாம்.

ADVERTISEMENT

கவனம்

பாதுகாப்பு நடைமுறைகள்

பேக்கிங் சோடாவை ப்ளீச் போன்ற கடுமையான ரசாயனங்களுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

அலுமினியப் பாத்திரங்கள் மற்றும் கண்ணாடிகளில் அதிக நேரம் தேய்த்தால் கீறல்கள் விழ வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை.

மேலும், நீண்ட நேரம் கைகளால் நேரடியாகத் தொட்டு வேலை செய்யும்போது தோல் வறட்சி அல்லது ஒவ்வாமை ஏற்படக்கூடும் என்பதால், சுத்தம் செய்யும் போது கைகளில் கையுறைகள் அணிந்து கொள்வது பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT