கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய நீரிழப்பை ஏற்படுத்தும் உணவுகள்
கொளுத்தும் கோடை மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகிறது. முக்கியமாக, நீரிழப்பு ஏற்படுத்தும் உணவுகளை கோடை காலத்தில் உண்ணாமல் இருப்பது நல்லது. அப்படி நீரிழப்பு ஏற்படுத்தும் 5 உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம். காரமான உணவுகள் காரமான உணவுகள் ருசியாக இருந்தாலும், அவை நீரிழப்பு விளைவுகளையும் ஏற்படுத்தும். மிளகாய் போன்ற மசாலாப் பொருட்களில் கேப்சைசின் உள்ளது. இது உடல் வெப்பநிலை மற்றும் வியர்வையை அதிகரித்து, நீர் இழப்புக்கு வழிவகுக்கும். இனிப்புகள் ஐஸ்கிரீம், பாப்சிகல்ஸ் போன்றவை விரும்பத்தக்க கோடைகால உணவுகளாகும். ஆனால் அவைகளை அதிகமாக உட்கொண்டால் நீரிழப்பு ஏற்படக்கூடும். சர்க்கரை நிறைந்த உணவுகள் இரத்தத்தின் சர்க்கரை அளவை உயர்த்தி, அதிக நீரை வெளியேற்ற தூண்டுகிறது.
காஃபின் கலந்த பானங்கள்
காபி, தேநீர் மற்றும் ஆற்றல் பானங்கள் போன்றவை குறிப்பாக வெப்பமான காலநிலையில் ஆற்றலை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், காஃபின் உடலில் இருக்கும் நீரை வேகமாக அகற்ற உதவும் பொருளாகும். எனவே. இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுகிறது. உப்பு தின்பண்டங்கள் உருளைக்கிழங்கு சிப்ஸ், பாப்கார்ன் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட முந்திரிகள் போன்ற உப்பு நிறைந்த தின்பண்டங்களில் அதிக சோடியம் உள்ளதால் அவர் நீரிழப்புக்கு பங்களிக்கும். அதே போல ஊறுகாயையும் இதே காரணத்திற்காக தவிர்க்க வேண்டும். வறுத்த உணவுகள் பிரஞ்சு பிரைஸ், சமோசா மற்றும் பர்கர்கள் போன்ற வறுத்த உணவுகளில் அதிக கொழுப்பு இருப்பதால் அவை நீரிழப்புக்கு வழிவகுக்கும். இது செரிமானத்தை மெதுவாக்கி, வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரித்து, உடல் வெப்பத்தையும் அதிகரிக்கக்கூடும்.