Page Loader
செடிகளில் இலைகள் வதங்கி, சுருண்டு கொள்வதன் காரணங்கள்
உங்கள் தாவரங்களில் இலைகள் சுருங்கி, சுருண்டுபோவதன் பொதுவான காரணங்கள்

செடிகளில் இலைகள் வதங்கி, சுருண்டு கொள்வதன் காரணங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
May 16, 2023
06:13 pm

செய்தி முன்னோட்டம்

நமது சுற்றுசூழலில், பல்வேறு வண்ணங்களில், தனித்துவமான வடிவங்களில் பசுமையான இலைகளுடன் வளரும் செடிகளையும் மரங்களையும் பார்ப்பது எப்போதுமே மனதிற்கு பரவசத்தைத் தரும். ஆனால் உங்கள் செடிகளின் இலைகள் வதங்கி, சுருண்டு கிடப்பதற்கு காரணம் வெயில் மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் இருக்கக்கூடும். உங்கள் தாவரங்களின் இலைகள் சுருண்டு வருவதற்கு சில சாத்தியமான காரணங்கள்: பூச்சிகள்: அஃபிட்ஸ் மற்றும் வெள்ளை ஈக்கள் போன்ற பூச்சிகள், இலைகளை சிதைத்து சுருட்டுவதன் மூலம், உங்கள் செடிகளுக்கு அழிவை ஏற்படுத்தும். இவை இரண்டும் பொதுவாக இலைகளின் அடிப்பகுதி அல்லது நுனிகளில் காணப்படும். அஃபிட்ஸ்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றாலும், வெள்ளை ஈக்கள் அவற்றின் ஒளிஊடுருவக்கூடிய தன்மையால், கண்டறிவது கடினமாக இருக்கும். பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, செடிகளை பாதுகாக்கலாம்.

card 2

செடிகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

அதிகப்படியான நீர்ப்பாசனம்: உங்கள் தாவரங்களுக்கு அதிக நீர்ப்பாசனம் செய்வது, அவற்றை பாதிக்கும். இதன் விளைவாக வேர் அழுகல் ஏற்படலாம், தொடர்ந்து உங்கள் இலைகளும் சுருண்டுவிடும். அதனால், நீர்ப்பாசனம் செய்யும் போது சரியான அளவை கடைபிடிக்கவும். அதிக வெப்பம்: தாவரங்கள் வளர்வதற்கு சூர்ய ஒளியும், வெயிலும் அவசியம் தான். ஆனால் அதிக வெப்பம், தீங்கு விளைவிக்கும். வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​தன் நீர் சத்தை பாதுகாக்க, செடிகளின் இலைகள் தானாகவே மூடிக்கொள்ளும். நைட்ரஜன் குறைபாடு: நைட்ரஜன், குளோரோபிலின் ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். இது தாவரங்களை சூரிய ஒளியை உணவாக மாற்ற உதவுகிறது. உங்கள் தாவரத்தின் இலைகள் ஆரோக்கியமற்றதாகத் தோன்றினால், அது நைட்ரஜன் பற்றாக்குறையைக் குறிக்கலாம்.