இரவில் தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் உண்மை
செய்தி முன்னோட்டம்
வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்த ஊட்டச்சத்துமிக்க உணவாக தயிர் கருதப்பட்டாலும், இரவு நேரங்களில் இதனை உட்கொள்வது பல்வேறு செரிமானக் கோளாறுகளைத் தூண்டக்கூடும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்குவதில் தயிர் முக்கியப் பங்கு வகித்தாலும், அதன் செரிமானத் தன்மை இரவு நேரத்தில் உடலின் சமநிலையை பாதிக்க வாய்ப்புள்ளது. பொதுவாகப் பலரும் மதிய உணவின் இறுதியிலோ அல்லது காலையிலோ தயிர் சாப்பிடுகின்றனர். ஆனால், இரவு நேரங்களில் தயிரில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பை ஜீரணிப்பது குடலுக்குக் கடினமான பணியாக மாறுவதால் அதனை தவிர்ப்பதே உடலுக்கு நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மாற்று வழிகள்
சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் கவனத்திற்கு
தயிரை நேரடியாக உட்கொள்வதற்குப் பதிலாக எளிதில் செரிமானமாகக்கூடிய நீர்மோர் அருந்துவது அல்லது குறைந்த அளவில் காய்கறிகள் கலந்த ரய்தா வடிவில் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஆஸ்துமா, மூச்சுத்திணறல், சைனஸ் அல்லது அடிக்கடி சளிப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இரவு வேளையில் தயிர் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழலில், பாக்கெட் தயிரையோ அல்லது புளித்த தயிரையோ தவிர்த்து, வீட்டில் தயாரிக்கப்பட்ட புதிய புளிக்காத தயிரை மட்டுமே குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.