
5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஆரோக்கியமான காலை உணவு வகைகள்
செய்தி முன்னோட்டம்
5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஆரோக்கியமான காலை உணவுகள் இதோ!
பிரட் ஆம்லெட்
ஒரு கிண்ணத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி அதோடு உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.
அதன்பின், தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெயை தடவவும். கல் சூடானதும், பாதி ஆம்லெட் கலவையை அதில் ஊற்றி தோசையை போல் பரப்பிவிடவும். அதன்பின், ஒரு முழு பிரட் துண்டை எடுத்து ஆம்லெட் மீது வைத்துவிட்டு, பிரட்டின் மீது மீதமுள்ள ஆம்லெட் கலவையை ஊற்றவும். ஒரு பக்கம் ஆம்லெட் வெந்ததும், அதை பிரட்டோடு சேர்த்து திருப்பி போட்டு மறுபக்கத்தையும் வேக வைக்கவும். சுட சுட பிரட் ஆம்லெட் தயார்!
ஆரோக்கியம்
கடலை மாவு அடை
ஒரு கப் கடலை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீரின் உதவியுடன் அதை இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். அதோடு, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி விழுது, கொத்துமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதன் பின், அந்த மாவை தோசைகளாக வார்த்து சுட்டு எடுத்து கொள்ளவும். இதற்கு தேங்காய் சட்னி மிக சிறந்த காம்பினேஷனாக இருக்கும்.
பச்சை பயறு தோசை
ஒரு கப் பச்சை பயறை இரவு முழுவதும் ஊற வைத்து, மிக்சியில் தோசை பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பின், அதை தோசைகளாக சுட்டு எடுத்து, தோசைப்பொடி அல்லது உங்களுக்கு விருப்பமான சட்னியை வைத்து பரிமாறவும்.