LOADING...
பெருங்காயத்தை சமையலில் பயன்படுத்துவதனால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா!
பெருங்காயம்

பெருங்காயத்தை சமையலில் பயன்படுத்துவதனால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா!

எழுதியவர் Prasanna
Mar 10, 2026
04:26 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய சமையலறைகளில் நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருட்களில் ஒன்று பெருங்காயம். ரசம், பருப்பு, மோரில் சிட்டிகை அளவிற்கு பெருங்காயம் சேர்ப்பது சுவை மற்றும் மனத்திற்கு மட்டுமல்ல, உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது. Asafoetida என அழைக்கப்படும் பெருங்காயம், ஃபெரூலா என்ற தாவரத்தில் உற்பத்தியாகும் பிசினாகும். இதனை முறைப்படுத்தி பொடியாக மாற்றி நமக்குத் தருகிறார்கள். சமைப்பதற்கு முன் கடுமையான வாசனையைக் கொண்டிருந்தாலும், சமையலில் சேர்த்த பின்பு பூண்டின் ஒத்த சுவைக்கு மாறி விடுகிறது. இது மனமானதாகவும், சாப்பிடும் போது சுவையைக் கூட்டுவதாவும், உடலுக்கு நன்மை செய்யும் ஒன்றாகவும் இருக்கிறது.

பெருங்காயம்

பெருங்காயத்தின் நன்மைகள்

100 கிராம் பெருங்காயத்தில், 67.8% கார்போஹைட்ரைட், 16% ஈரப்பதம், 4% புரதம், 7% மினரல்கள், 4.1% நார்ச்சத்து ஆகியவை அடங்கியிருக்கிறது. இவற்றுடன், கால்சியம், பாஸ்பரஸ், கரட்டின், இரும்புச்சத்து, நியாசின் உள்ளிட்டவையும் உள்ளது. பெருங்காயத்தை உணவில் பயன்படுத்துவது ஜீரண ஆற்றலை மேம்படுத்த உதவும். மலக்குடல் அழற்சி, வயிறு வீக்கம், குடல் அழற்சி ஆகியவற்றைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும். புற்றுநோய், ரத்த அழுத்தத்தைத் குறைக்கும் பண்புகளைக் கொண்டிருக்கும் பெருங்காயம், மூலநோய், வாய்வுத் தொல்லை ஆகியவற்றைக் குறைக்கவும் பயன்படுகிறது.

Advertisement