வீட்டில் நீங்கள் சுத்தம் செய்யாத ஆனால் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள்
வாரம் முழுவதும், வேலை அல்லது பள்ளி என பிஸியாக இருக்கும் போது, நம் வீட்டை சுத்தம் செய்வதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. அந்த நாட்களில் அடிப்படை சுகாதாரத்தை பராமரிப்பது போதுமானது. ஆனால் வார இறுதி நாட்களில்,வீட்டை சுத்தப்படுத்துவதில் கவனம் செலுத்துபவர்களா நீங்கள்? துணி துவைப்பது, பெட்ஷீட் மாற்றுவது, பேன் துடைப்பது..இது எப்போதும் செய்வதுதான். ஆனால், நீங்கள் செய்யாதவறிய, சுத்தம் செய்யவேண்டிய சில பொருட்களும் உங்கள் இல்லத்தில் உண்டு. அவை எவை எனத்தெரியுமா? வாஷிங் மெஷின்/ டிஷ் வாஷர்: வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் அழுக்காக இருப்பதைக் கண்டாலோ அல்லது துர்நாற்றம் ஏற்பட்டாலோ உடனடியாக சுத்தம் செய்யுங்கள்.
சுத்தம் செய்யவேண்டிய தினசரி இயந்திரங்கள்
இயர்பட்ஸ்: ஒவ்வொரு முறையும் உங்கள் இயர்பட்ஸைப் பார்க்கும்போது, எங்கோ ஒரு மூலையில் அழுக்கு சேகரிக்கப்பட்டிருப்பதை கண்டிருப்பீர்கள். அடுத்த முறை அழுக்கைப் பார்த்தால், உங்கள் இயர்பட்ஸை சுத்தம் செய்யவும். ஸ்க்ரீன்கள்: நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது தொடுதிரை எனப்படும் ஸ்க்ரீன்கள் தான். உங்கள் மொபைல், டேப் அல்லது லாப்டாப்பில் அடிக்கடி பயன்படுத்துவது இதனை தான். அதனால் அதனை ஒவ்வொரு வாரமும் சுத்தம் செய்ய வேண்டும். மெத்தை: ஒரு அழுக்கு மெத்தை பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் நீங்கள் அதை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். மெத்தையை சில மணிநேரம் வெயிலில் வைப்பதைத் தவிர, பேக்கிங் சோடாவை தூவி, 20 நிமிடங்களுக்குப் பிறகு அதனை துடைத்து சுத்தம் செய்யலாம்.