LOADING...
டேட்டூ பார்லர் போகும்போது இந்த தவறுகளை செய்யாதீர்கள், ஆபத்தாகலாம்!

டேட்டூ பார்லர் போகும்போது இந்த தவறுகளை செய்யாதீர்கள், ஆபத்தாகலாம்!

எழுதியவர் Venkatalakshmi V
Jun 11, 2026
06:56 pm

செய்தி முன்னோட்டம்

டேட்டூ போட்டுக்கொள்வது ஒரு முக்கியமான முடிவு. இதில் பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். டேட்டூ பார்லருக்கு போகும்போது சில தவறுகள் நடக்கலாம், அதனால் உங்களுக்கு பாதிப்பு வரலாம். இந்த கட்டுரையில், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகளைப் பற்றி பார்ப்போம். அப்படி செய்தால், உங்கள் அனுபவம் நன்றாக இருக்கும், எந்தப் பிரச்சனையும் வராது. சரியான தகவல், அதோடு கொஞ்சம் கவனத்துடன் இருந்தால், ஒரு சூப்பரான டேட்டூவை நீங்கள் போட்டுக்கொள்ளலாம்.

#1

விவரம் தெரியாமல் பார்லரைத் தேர்ந்தெடுப்பது

டேட்டூ போடுவதற்கு முன், தகவல்களை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். பலர் சரியான தகவல்கள் இல்லாமல் ஏதோ பார்லருக்கு சென்றுவிடுவிட்டு பின்னர் வருத்தப்படுவார்கள். டேட்டூ போடுவதற்கு பார்லர் எப்படி எப்படி உள்ளது, அங்குள்ள ஆர்ட்டிஸ்ட் யார், அவர்களின் முன்னனுபவம் எப்படி என்பதை அறிந்து செல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல், பார்லர் சுத்தமாக உள்ளதா, பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக கடைபிடிக்க படுகிறதா என்பதையும் சரி பார்க்கவேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

#2

அறிமுகம் இல்லாத ஆர்ட்டிஸ்ட்டை நம்புவது

தெரியாத டேட்டூ ஆர்ட்டிஸ்ட்டை நம்பி செல்வது ஒரு பெரிய தவறாக இருக்கலாம். அவர்கள் விலை குறைவாக டேட்டூ போட்டு விடலாம், ஆனால் அவர்களின் வேலை எப்படி இருக்கும், பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பது தெரியாது. அதனால், அனுபவம் வாய்ந்த, ப்ரொஃபஷனல் ஆர்ட்டிஸ்ட் இடமே டேட்டூ போட்டுக்கொள்வது அறிவுறுத்தப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே போட்ட டேட்டூ புகைப்படங்களையும் பார்த்து, அவர்களின் ரேட்டிங்ஸ், ரிவ்யூஸ் எல்லாம் படித்து விட்டு செல்லுங்கள். அப்போதுதான், அவர்களின் பணி புரியும் திறன் உங்களுக்கு தெரிய வரும்.

Advertisement

#3

சுத்தத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது

டேட்டூ பார்லரின் சுத்தம் ரொம்ப முக்கியம். பலர் இதை பற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை. அப்படிவிட்டால், பின்னால் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் வரலாம். எப்போதும் பார்லர் சுத்தமாக உள்ளதா, அனைத்து பாதுகாப்பு விதிகளும் கடைபிடிக்கபடுகிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல், ஆர்ட்டிஸ்ட்டின் கைகள் சுத்தமாக உள்ளதா அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் அனைத்தும் சுத்தமாக உள்ளதா என்பதையும் உறுதி செய்துக்கொள்ளுங்கள். இப்படி செய்வதனால், உங்கள் அனுபவம் பாதுகாப்பாவும் சந்தோஷமாவும் இருக்கும்

Advertisement

#4

சொந்தமா டிசைன் போடுறது

சில சமயம் மக்கள் அவர்களே டிசைன் மனதில் வைத்திருப்பார்கள், சிலரோ, வேறு படத்தை பார்த்து அப்படியே வரைய நினைப்பார்கள். அது அவ்வளவு சரியல்ல. ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் ஒவ்வொரு மாதிரி, அதனால் மற்றவர் போட்டிருந்த அதே டிசைன் நன்றாக இருக்காது. உங்கள் உடலுக்கு ஏற்றது போல டிசைன் போட்டுக்கொள்வது நல்லது. அதனால், ஆர்ட்டிஸ்ட்டுகளிடம் அட்வைஸ் கேட்டு டிசைன் போடுங்கள். அப்படி செய்வதால், உங்களின் டேட்டூ இன்னும் அழகாக, எடுப்பாக தெரியும்

#5

வலியைப் பற்றி தவறாக நினைப்பது

சிலர், டேட்டூ போடுவதற்கு முன், அவ்வளவாக வலி இருக்காது என நினைத்துக்கொண்டு பார்லர் செல்வார்கள். ஆனால், அது உண்மை இல்லை. டேட்டூ போடும்போது கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யும், ஆனால் அதை தாங்கிக்கொள்வது உங்கள் பொறுப்பு. அதனால், மனரீதியாக தயாராக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தலாம். இந்த தகவல்களை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, உங்கள் டேட்டூ அனுபவத்தை பாதுகாப்பாவும் சந்தோஷமாவும் மாற்றலாம்.

Advertisement