இரவில் ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? இந்த விஷயங்களை தவிர்க்க வேண்டுமென நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்
இரவில் தூங்கி எழுந்ததும், நாள் முழுதும் சோர்வாகவே உணர்ந்தால், உங்களுக்கு இரவில் நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் இல்லையென அர்த்தம். அதை சரி செய்ய, நிபுணர்கள் சில பரிந்துரைகள் தருகிறார்கள். அவை இதோ: ஒழுங்கற்ற தூங்கும் நேரம்: நீங்கள் தூங்கும் நேரத்தை, ஒழுங்கற்ற விதத்தில் கடைபிடிப்பவராக இருந்தால், நிச்சயம் உங்கள் தூக்கம் பாதிக்கும். உங்கள் உடலையும், மனதையும் குழப்பும் வகையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரத்தில் இரவில் தூங்க செல்வதை தவிர்க்க வேண்டும். ஸ்மார்ட்போன் உபயோகிப்பு: உறங்குவதிற்கு முன்னர் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். காரணம், அதை பார்ப்பதால், நீங்கள் கண்களை மூடி உறங்க சென்றாலும், உங்கள் மனது விழிப்புடன் இருக்கும். அதனால் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆகும்.
நேரம் மதியம் அதிகம் தூங்குவதை தவிர்க்கவும்!
நீண்ட 'குட்டி தூக்கத்தை' தவிர்க்கவும்: உங்கள் தினசரி வேலைக்கு நடுவிலே குட்டி தூக்கம் போடுவது, உங்கள் உற்பத்திதிறனை வளர்க்கும் என்பது ஆராய்ச்சிகளின் முடிவு. எனினும் நீண்ட நேரம் குட்டி தூக்கம் போடுவதை தவிர்க்கவும். அதிகபட்சமாக 30 நிமிடங்கள் தூங்கலாம். அதுவும் மாலை 4 மணிக்கு முன்னர் தூங்குவது நல்லது. உணவு மற்றும் உணவுப் பழக்கம்: இரவு படுக்க செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவை சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில்,காபி, டார்க் சாக்லேட், டீ, சர்க்கரை நிறைந்த தின்பண்டங்கள் போன்ற பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். மன அழுத்தம் மற்றும் கவலை: இவ்வகை காரணிகள் உங்கள் தூக்கத்தை கெடுக்கும். அதனால், படுப்பதற்கு முன்னர், தியானம் செய்து, மனதை அமைதியாகி படுக்க செல்லுங்கள்.