
Perfume Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் மூன்றாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி ஒரு குறிப்பு
செய்தி முன்னோட்டம்
பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரமும் மக்கள், காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த வாரம், காதலில் தோல்வியுற்றவர்கள், சிங்கிள்கள், பிரிந்த காதலர்கள், தங்கள் கடந்த கால கசப்புகளை மறக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்.
இது ஸ்லாப் டே(Slap day) தொடங்கி, பிப்ரவரி 21 அன்று பிரேக்அப் டேயுடன் முடிவடைகிறது.
இடையில் கிக் டே(Kick day), பெர்ஃப்யூம் டே(Perfume day), ஃப்ளர்ட் டே(Flirt day) , கன்ஃபெஷன் டே (Confession day), மிஸ்ஸிங் டே(missing day) என்று கொண்டாடப்படுகிறது.
இன்று பிப்ரவரி 17, பெர்ஃப்யூம் டே(Perfume day) என கொண்டாடுகிறார்கள்.
காதலர் தினம்
பெர்ஃப்யூம் வகைகள்
பெர்ஃப்யூம் டே அன்று, உங்கள் பழைய காதலின் கசப்பான அனுபவங்களை மறந்து, சுய-அன்பு செய்வதற்கு சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில், உங்களுக்கு பிடித்த வாசனை திரவியங்களை வாங்கி, உங்களை மகிழ்வித்து கொள்ளுங்கள்.
நீங்கள் மற்றவர்களுக்கு மிகவும் வசீகரமாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவதற்கும், உங்களுடைய தன்னம்பிக்கையை உயர்த்தவும், வாசனை திரவியங்கள் உதவும் என அறிவிய பூர்வமாக நிரூபிக்க பட்டுள்ளது.
சந்தையில், வாசனை திரவியத்தில் சேர்க்கப்பட்டுள்ள எண்ணெய் செறிவின் அடிப்படையில் ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பர்ஃபம், ஈவ் டி பர்ஃபம், ஈவ் டி டாய்லெட், ஈவ் டி கொலோன் மற்றும் டியோடரன்ட் ஆகியவை அடங்கும். அவற்றில் உங்கள் தேவைக்கு தகுந்தாற் போல வாங்கி மகிழலாம்.